அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று உயர்நீதிமன்ற தனிநீதிபதி அளித்த தீர்ப்பு காரணமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.