மின் கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 23 ம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


மானியம் தேவையென்றால் பெற்றுக்கொள்ளலாம், அதற்காக மத்திய அரசை குறைக்கூற கூடாது. செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். 


திடீரென உயர்த்தப்பட்ட மின் கட்டணம்... அதிரடியாக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அண்ணாமலை..!


பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஆடிட்டர் ரமேஷ் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தேர்தல் வாக்குறுதியில் இரண்டு மாதம் மின் கட்டணம் என்பதை ஒரு மாதமாக கொண்டு வரப்படும் இதனால் மக்களுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் சேமிப்பு ஆகும் என கூறினார். தற்போது மின் கட்டணத்தை உயர்த்துள்ளது மக்களின் தலையில் கல்லை போட்டது போல உள்ளது என்றும் மத்திய அரசின் நிர்பந்தத்தால் மின் கட்டணம் உயர்த்தியதாக கூறும் திமுக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து மின் கட்டடத்தை உயர்த்தி உள்ளது.


குறிப்பாக மத்திய அரசின் மின் மானியம் கிடைக்க வேண்டுமென்றால் தமிழக மின்சார வாரியத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்தால் மின் மானியம் கிடைக்கும் என தெரிவித்திருந்தது. ஆனால்மத்திய அரசின் மானியத்தை ஏற்று கொள்ளாமல் தனியாரிடம் அதிக விலையில் வாங்கி தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது அதனை சரி செய்தாலே மின்மிகு மாநிலமாக இருக்கும் என தெரிவித்தார்.



மேலும், தமிழகத்தில் மூன்று விஷயங்கள் சரி செய்தாலே மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக திகழும் எனவும், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அனல் மின் நிலையங்களில் 60 சதவீதம் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. அதனை 80 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் சோலார் அமைக்க தமிழக அரசு லஞ்சம் வாங்குகின்றனர் எனவே தான் சோலார் பொருத்துவதற்கு தயங்குகின்றனர். மக்கள் இதை சரி செய்து ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு 24 மணி நேரத்தில் சோலார் இணைப்பு பெற வசதி செய்து தரப்பட வேண்டும். தனியார் நிறுவனத்திற்கு 48 மணி நேரத்தில் சோலார் இனிப்பு அமைக்க ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவித்தார்.


இதை எல்லாம் திமுக அரசு செய்யாமல் மின் பற்றாக்குறை எனக் கூறியும் மத்திய அரசு நிர்பந்தத்தினால் தான் மட்டுமே மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தது. கண்டிக்கத்தக்கது என்றும் உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் வருகின்ற 23 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். இதன் பிறகும் தமிழக அரசு மின் உயர்வை குறைக்காவிட்டால் அனைத்து மின்வாரிய அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண