TN Assembly Session LIVE:நான் வந்ததும் சட்டபேரவையில் கலாட்டா நடந்தது... துரைமுருகன் ஜாலி டாக்!
TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவை நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..
சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது - மின்வெட்டு குறித்த விவாதத்தில் பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி பேச்சால் பேரவையில் சிரிப்பலை
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக சட்டபேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
மருத்துவ விடுப்புக்கு பிறகு பேரவைக்கு வந்த துரைமுருகன் ஜாலியாக பேசியுள்ளார். அதில், நீண்ட நாளா நான் சபையில் இல்லை; ரொம்ப டல் அடிக்குதுன்னு எல்லாரும் சொன்னாங்க, நான் வந்த உடனே ஒரு கலாட்டா நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமெனில், புகழ்ச்சிகளையும் பாராட்டுகளையும் புறம்தள்ளிவிட்டு, அவமானங்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வலிகளையும் அவமானங்களையும் புகழ்ச்சிகளையும் பாராட்டுகளையும் புறம்தள்ளிவிட்டு, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று செயல்படுவதைதான், இந்த 50 ஆண்டு பொதுவாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது என்று சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு தொடர்பாக சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கமளித்தார். அதில், மாண்புமிகு ஆளுநருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை எனவும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கிண்டி ஆளுநர் மாளிகையில் 210 நாட்களாக முடங்கி கிடக்கிறது அதன் காரணமாகவே புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 35 கோடியில் நவீன தங்கும் விடுதி அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
காட்டாங்குளத்தூரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா..? என்ற கேள்விக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பதிலளித்தார். அதில், விளையாட்டு வீரர்கள் மைதானங்களை விட உடற்பயிற்சி கூடங்களை அதிகமாக விரும்பிகிறார்கள். அதன் அடிப்படையில், உடற்பயிற்சி கூடம் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைத்து தரப்படும் என தெரிவித்தார்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் வெளிநாட்டவர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் வந்து தங்கும் வகையில் பயணியர் விடுதி அமைக்கப்படுமா..? என்று திமுக எம்எல் எழிலரசன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஏற்கனவே 25 கோடி செலவில் அங்கு தங்கும் விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அங்கு கிடப்பில் உள்ள தண்ணீர் வசதி கொண்டுவரப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் அது திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆரணி தொகுதி அரியபாடி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார மருத்துவமனை அமைக்கப்படுமா..? என்ற கேள்விக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மாசு விளக்கமளித்தார். அதில், குறைந்தது ஒரு ஊராட்சியில் 30, 000 பேர் வசிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆரம்ப சுகாதார மருத்துவமனை அமைக்கப்படும். ஆனால், மக்கள் பலன் பெரும் வகையில் கிராமங்களில் நடமாடும் மருத்துவமனை வாயிலாக தற்காலிக கூடாரம் அமைக்கப்படும் ஏனென்று தெரிவித்தார்.
சட்டப்பேரவை விவாதம் நேரலையில் காண :
செங்கம் தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா..? நிலத்தை கண்டறிய அரசு முன்வரவேண்டும் என திமுக எம்எல்ஏ கிரி கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, உறுப்பினர் நிலத்தை கண்டறிந்து சொன்னால் நிச்சயம் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
அவினாசியில் சிப்காட் அவசியமா..? என்றும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்களா..? என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு காரியத்தையும் திமுக அரசு செயல்படுத்தாது. விவசாயிகளை பாதிக்காத வகையில் சிப்காட் அவினாசியில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
கேள்வி : முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன்
தருமபுரியில் சிப்காட் அமையுமா..?
பதில் : அமைச்சர் தங்கம் தென்னரசு
தருமபுரியில் சிப்காட் அமைக்கப்பட நிலம் கையப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிப்காட் அமைக்கும் பணி தொடங்கும்.
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாணியக் கோரிக்கைமீது விவாதம்
Background
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாணியக் கோரிக்கைமீது விவாதம்
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -