TN Assembly Session LIVE: இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்..

TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..

ABP NADU Last Updated: 20 Apr 2022 11:46 AM
ஆளுநருக்கு எதிரான கருப்புக்கொடி: பேரவையில் இருந்து வெளியேறியது அதிமுக..!

ஆளுநருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை கண்டித்து பேரவையில் இருந்து அதிமுக வெளியேறியது.


 ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

தொழில்துறை பெயர் மாற்றம் - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

தொழில்துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு பரிசு - பேரவையில் அறிவிப்பு

தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ.5 லட்சத்துடன் விருது வழங்கப்படும் என்றும், அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஓசூரில் புதிய விமான நிலையம் - தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே அதிகளவில் தொழிற்சாலைகள் இருப்பதால் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி அமலாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரியும், வளர்ச்சியும் வரவில்லை : நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி வரி அமலாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரியும், வளர்ச்சியும் வரவில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

ஜிஎஸ்டிக்கு முதல் எதிரியாக இருந்தவர் இன்றைய பிரதமர் மோடிதான் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அரசியல் என்று பார்த்தால் ஜிஎஸ்டிக்கு முதல் எதிரியாக இருந்தவர் இன்றைய பிரதமர் மோடி அவர்கள்தான் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

TN Assembly Session LIVE: கூடலூர் அரசு கலை கல்லூரியில் தாவரவியல் பாடப்பிரிவுகள் அமைக்கப்படுமா..?

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் வரும் காலங்களில் பல கல்லூரிகளில் நிறைய பாடப்பிரிவுகள் இடம் பெற இருக்கின்றனர். கூடலூர் அரசு கலை கல்லூரியில் தாவரவியல், விலங்கியல்  பாடப்பிரிவுகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

அடையாளம்பட்டு ஊராட்சியில் கல்லூரிக்கு இடம் இருந்தும் கட்டாதது ஏன்..? விளக்கமளித்த அமைச்சர் பொன்முடி!

கல்லூரி கட்ட இடங்கள் அனைத்து இடங்களிலும் உள்ளது. ஆனால், கல்லூரி கட்ட அரசிடம் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. தொடர் செலவீனங்கள், ஆசிரியர் நியமனம் ஆகியவை கருத்தில்கொண்டும், வருடத்திற்கு 20 கோடி செலவாகும். அதன் அடிப்படையில் வரும் காலங்களில் முடிவு எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

TN Assembly Session LIVE: முல்லை பெரியாறு விவகாரம் : சட்டபேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் 

முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக சட்டபேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் 

நான் வந்ததும் சட்டபேரவையில் கலாட்டா நடந்தது... துரைமுருகன் ஜாலி டாக்!

மருத்துவ விடுப்புக்கு பிறகு பேரவைக்கு வந்த துரைமுருகன் ஜாலியாக பேசியுள்ளார். அதில், நீண்ட நாளா நான் சபையில் இல்லை; ரொம்ப டல் அடிக்குதுன்னு எல்லாரும் சொன்னாங்க, நான் வந்த உடனே ஒரு கலாட்டா நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று செயல்படுவதுதான் - சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின்

வலிகளையும் அவமானங்களையும் புகழ்ச்சிகளையும் பாராட்டுகளையும் புறம்தள்ளிவிட்டு, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று செயல்படுவதைதான், இந்த 50 ஆண்டு பொதுவாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது என்று சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

TN Assembly Session LIVE: ஆளுநருடன் எந்த முரண்பாடும் இல்லை - சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின்!

நேற்று, ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு தொடர்பாக சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கமளித்தார். அதில், மாண்புமிகு ஆளுநருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை எனவும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கிண்டி ஆளுநர் மாளிகையில் 210 நாட்களாக முடங்கி கிடக்கிறது அதன் காரணமாகவே புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

தொழில்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழ்நாடு சட்டபேரவையில் கனிமவளத்துறை, தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடக்கிறது. 

Background

நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் நேற்று. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாணியக் கோரிக்கைமீது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்றும் சட்டபேரவை விவாதம் நடைபெற உள்ளது. 


கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.