TN Assembly Session LIVE: நெடுஞ்சாலைத்துறையில் உள்தணிக்கை நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு

TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..

ABP NADU Last Updated: 22 Apr 2022 05:47 PM
நெடுஞ்சாலைத்துறையில் உள்தணிக்கை நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு

நெடுஞ்சாலைத்துறை உள்தணிக்கை செய்யப்படும் என்றும், ஒவ்வொரு வட்டத்திற்கும் தனித்தனியாக மே 1-ந் தேதி முதல் மே 7-ந் தேதி வரை தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் தெரிவித்துளம்ளார். 

275 கல்லூரி விடுதிகளில் இணையவழி நூலகம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

275 கல்லூரி விடுதிகளில் ரூ.2.20 கோடியில் இணையவழி நூலகம் அமைக்கப்படும். சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரை குழுவாக இணைத்து 25 நவீன சலவையகங்கள் ரூ.75 லட்சத்தில் ஏற்படுத்தப்படும். 10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசித்து நல்ல முடிவெடுப்பார் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

விஷம பிரச்சாரத்தை எதிர்கட்சித் தலைவர் செய்து வருகிறார் - மின்வெட்டு குறித்த விவாதத்தில் செந்தில் பாலாஜி பேச்சு

அதிமுக ஐடி விங் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டும் விஷம பிரச்சாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் செய்து வருகிறார் - மின்வெட்டு குறித்த விவாதத்தில் செந்தில் பாலாஜி பேச்சு

மின்வெட்டு விவகாரம் : சட்டபேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கத்தை ஏற்க மறுத்து சட்டபேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு 

தமிழ்நாட்டில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு : அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது எனவும், அதுவும் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மின்பற்றாக்குறையால் வெறும் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு நிலவியது - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்பற்றாக்குறையால் வெறும் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு நிலவியது - அமைச்சர் செந்தில் பாலாஜி

மத்திய தொகுப்பில் இருந்து வர வேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் இந்த நிமிடம் வரை நமக்கு கிடைக்கவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

மத்திய தொகுப்பில் இருந்து வர வேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் இந்த நிமிடம் வரை நமக்கு கிடைக்கவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

மத்திய அரசு படிப்படியாக குறைத்துவிட்டது - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்திற்கு ஒருநாள் நிலக்கரி தேவை 72,000 டன்னாக இருந்த நிலையில் 48,000 முதல் 50,000 டன் வரையிலான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த நிலையில் அதனை  மத்திய அரசு படிப்படியாக குறைத்துவிட்டது - அமைச்சர் செந்தில் பாலாஜி

குறைந்த அளவு நிலக்கரியை மட்டுமே மத்திய அரசு தருகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றசாட்டு

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவையாக உள்ளது. ஆனால், மத்திய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரியை மட்டுமே அளித்தது. இதுவே மின்வெட்டுக்கு முக்கிய காரணம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

அதிமுக ஆட்சியில் 68 முறை மின்வெட்டு!

அதிமுக ஆட்சியில் 68 முறை மின்வெட்டு ஏற்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டியுள்ளார். 

குறுகிய கால ஒப்பந்த மூலம் 3,000 யூனிட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகிறோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

குறுகிய கால ஒப்பந்த மூலம் 3,000 யூனிட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகிறோம்- செந்தில் பாலாஜி

ஈபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

கடந்த 18-ஆம் தேதி  தமிழகத்தின் ஒருநாள் மின் நுகர்வு 317 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில் நேற்று 363 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது - மின்வெட்டு குறித்து ஈபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின்வெட்டு : அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழ்நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் மின்வெட்டு தொடர்பாக சட்டபேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் 

ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் : முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இனி 4 க்கு பதிலாக 6 கிராமசபை கூட்டங்கள் :  ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 உடன் மார்ச் 22, நவம்பர் 1 ம் தேதியும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.

எல்லோருக்கும் அல்ல; தேவைப்படுகின்ற எம்.எல்.ஏக்களுக்காவது கார் வழங்க அரசு முன்வர வேண்டும் : பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்

எல்லோருக்கும் அல்ல; தேவைப்படுகின்ற எம்.எல்.ஏக்களுக்காவது கார் வழங்க அரசு முன்வர வேண்டும் அல்லது கார் வாங்க வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்- பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் முதல்வருக்கு கோரிக்கை

சிறந்த கிராம ஊராட்சிக்கு ' உத்தமர் காந்தி விருது'

சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிக்கு இந்தாண்டு முதல் ' உத்தமர் காந்தி விருது' வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அமர்வுப்படி தொகை 5 மடங்கு உயர்த்தி வழங்கப்படும்

மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி தொகை 5 மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்றும், அரசின் இந்த அறிவிப்பால் 1.10 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனடைவார்கள் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை : தோட்டக்கலை கல்லூரி வருமா என எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் கேள்வி

வெற்றிலை பாக்கு பழக்கம் குறைந்துவிட்டது. வெற்றிலை ஆராய்ச்சி மையத்துக்கு வாய்ப்பில்லை. பக்கத்து மாவட்ட ஆய்வு மையத்தை பயன்படுத்தலாம்

வெற்றிலை பயிர் ஆராய்ச்சி மையம் தேவைக்கேற்ப இருக்கின்றன. தற்போது சாத்தியமில்லை - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

வெற்றிலை பயிர் ஆராய்ச்சி மையம் தேவைக்கேற்ப இருக்கின்றன. தற்போது சாத்தியமில்லை - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் ஐ.பெரியசாமி

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவு நியாய விலைக்கடை, கட்டப்பட்டு செயல்படாமல் இருந்தால், காரணம் அறிந்து இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவு நியாய விலைக்கடை, கட்டப்பட்டு செயல்படாமல் இருந்தால், காரணம் அறிந்து இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

கட்டக்குடி : 500 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது - அமைச்சர் ஐ.பெரியசாமி

கட்டக்குடி : 500 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது - அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்.. நேரலை இங்கே

வடசென்னையில் ரூ. 10 கோடி செலவின் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

வடசென்னையில் ரூ. 10 கோடி செலவின் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி  அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னைக்கு அருகே மிகப்பெரிய விளையாட்டு நகரம் (மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைய உள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை

சென்னைக்கு அருகே மிகப்பெரிய விளையாட்டு நகரம் (மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைய உள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் நேற்று உரையாற்றினார்

Background

கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.