TN Assembly Session LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் தனித் தீர்மானம்

Tamil Nadu Assembly Session LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 26 Jun 2024 10:43 AM
பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

  • இதுபோன்ற குற்றங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுவார். ஆனால் இவ்வழக்குகளில் விசாரணையின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் விசாரணை அலுவலராக காவல் கண்காணிப்பாளரை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

TN Assembly Session LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் தனித் தீர்மானம்

Caste Census Resolution : சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

TN Assembly Session LIVE: வீண் விளம்பரம் தேடுவதில் அதிமுகவினர் முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்

TN Assembly Session LIVE: வீண் விளம்பரம் தேடுவதில் அதிமுகவினர் முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்


கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க தயாராக இருக்கிறது என தெரிவித்து வருகிறேன். மக்கள் பிரச்சனைகளை பேச அவகாசம் அளிக்கப்படும் என தெரிவித்தும், அதிமுக வெளியில் போய் பேசுவது மாண்பல்ல. அதிமுகவினர் விளம்பரம் தேடுகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேச்சு

46,000 அரசுப் பணியிடங்கள் : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

2026 ஜனவரிக்குள் 46,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

"14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

"நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

நெல்லை கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.

நெல்லை கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்...


வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண் கல்வி, சம உரிமை, சாதி மறுப்பு திருமணங்கள் ஆரம்பம் முதலே ஆதரித்து வரும் இயக்கம் திமுக. வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டங்கள் மூலம் விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

வீராதி வீரர்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி..” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

“சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்று சொன்ன வீராதி வீரர்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி..” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை!

மூன்றாவது நாளாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளி! அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவு. இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை!

திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கிறார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

TN Assembly 2024 Live | சட்டமன்றத்துக்கு திரும்பிய EPS.. கார சார விவாதத்தில் திமுக!

"சாதிவாரி கணக்கெடுப்பு : தீர்மானம் கொண்டுவர உள்ளோம்" - முதலமைச்சர் ஸ்டாலின்

"சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு விரைந்து நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவர உள்ளோம்" - தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பாமக உறுப்பினர் ஜி.கே.மணியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

"சாதிவாரி கணக்கெடுப்பு : தீர்மானம் கொண்டுவர உள்ளோம்" - முதலமைச்சர் ஸ்டாலின்

"சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு விரைந்து நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவர உள்ளோம்" - தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பாமக உறுப்பினர் ஜி.கே.மணியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

"சாதிவாரி கணக்கெடுப்பு : தீர்மானம் கொண்டுவர உள்ளோம்" - முதலமைச்சர் ஸ்டாலின்

"சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு விரைந்து நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவர உள்ளோம்" - தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பாமக உறுப்பினர் ஜி.கே.மணியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக தரவுகளை பெற்றுத்தர நீதியரசர் பாரதிதாசன் குழுவை அமைத்துள்ளோம் – அமைச்சர் ரகுபதி

TN Assembly Session LIVE: வன்னியர் இடஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜிகே மணி கேள்வி எழுப்பினார். அப்போது, நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் வன்னியர் இடஒதுக்கூட்டை அமல்படுத்த முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

காற்றை எப்படி தடுக்க முடியாதோ, அதே மாதிரி மக்களின் உணர்வுகளை தடுக்க முடியாது. கள்ளக்குறிச்சி விஷசாராய உள்ளிட்ட சம்பவங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லும் காலம் வெகு விரைவில் வரும்..


கள்ளக்குறிச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Thozhi Hostel : தமிழ்நாட்டில் மேலும் 3 இடங்களில் கூடுதலாக தோழி விடுதிகளை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு

தமிழ்நாட்டில் மேலும் 3 இடங்களில் கூடுதலாக தோழி விடுதிகளை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு. சென்னை, மதுரை, கோவையில் கூடுதலாக 3 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 10,000 கி.மீ. கிராமப்புற சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்

ஆவின் செலவினங்கள் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்

பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மானிய கோரிக்கை மீதான பதிலுரை: பால்வளத் துறையில் அனைத்து ஒன்றியங்களும் லாபகரமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகப்படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 42 சதவீதம் அகவிலைப்படி அனைவருக்கும் ஏற்கனவே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அகவிலைப்படியை 46%ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் பிடித்தம் தவிர்த்து வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும். ஆவின் செலவினங்கள் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.

தெருநாய் பிரச்னைகள் அதிகமாக உள்ளன - அமைச்சர் கே.என். நேரு

தெருநாய் பிரச்னைகள் அதிகமாக உள்ளன. அவற்றிற்கு தற்போது கருத்தடைகள் செய்யப்படுகின்றன. நாய்களை உரிமையாளர்கள் பூங்காக்களுக்கு அழைத்துச்செல்லும்போது  சில தவறுகள் நிகழ்கினறன - அமைச்சர் கே.என். நேரு

கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் நடவடிக்கை - அமைச்சர் கே.என். நேரு

கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிகை எடுக்கப்படும். சாலையில் திரிந்து மாடு மூன்றாவது முறையாக பிடிபட்டால், அது பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விற்கப்படும். விதிமுறை மீறலில் ஈடுபடும் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் - அமைச்சர் கே. என். நேரு

சென்னைய்ல் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - கே.என். நேரு

சென்னையில் தற்போது 200 வார்டுகள் உள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஒவ்வொரு வார்டிலும் தற்போது 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். சென்னையில் மொத்தல் 89 லட்சம் பேர் வசிக்கின்றனர் என அமைச்சர் கே. என். நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

திமுக உறுதியாக உள்ளது - அமைச்சர் ரகுபதி

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால், திமுக சிபிஐ விசாரணை கோரியது. ஆனால், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உடனடியாகவும், வெளிப்படையாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் ரகுபதி

சிபிஐ விசாரணை எதற்கு ? அமைச்சர் ரகுபதி கேள்வி

சிபிஐ விசாரணை எதற்கு? அதிமுக காலத்தில் நடந்த விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரித்ததா? திமுக ஆட்சியில் வெளிப்படத்தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, சிபிஐ விசாரணை தேவையற்றது - அமைச்சர் ரகுபதி

மக்கள் மன்றத்தில் அதிமுக தோல்வி; அதனால் அதிமுக அமளி - அமைச்சர் ரகுபதி

மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்ததால் அதிமுக சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபடுகிறது. சிபிசிஐடி, ஒருநபர் குழு விசாரிக்க உடனடியாக உத்தரவிட்டவர் முதலமைச்சர். கேள்வி நேரத்திற்கு பின் அனுமதி அளிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். அதைவிடுத்து கேள்வி நேரத்தை ஒத்திவைக்கும் வழக்கமே கிடையாது. எதிக்கட்சியினர் கருத்துக்களை கூற வாய்ப்பு அளிக்கப்பட்டது. பேரவையில் பேச சபாநாயகர் அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை. திமுக அரசு வெளிப்படத்தன்மையுடன் செயல்படுவதால் சிபிஐ விசாரணை தேவைப்படவில்லை. சட்டப்பேரவயில் இல்லாத விஷயத்தை கூறி அதிமுகவினர் பேரவையை முயற்சி செய்கின்றனர். 

எடப்பாடி பழனிசாமி பொய் பேசி வருகிறார் - ரகுபதி

சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்கப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி அப்பட்டமாக பொய் பேசி வருகிறார். மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர். கேள்வி நேரத்தில் விவாதங்களை நடத்த முடியாது என தெரிந்தும் அமளியில் ஈடுபடுகின்றனர். தீர்மானங்களின் மீது விவாதம் நடத்த அழைத்தபோது அதிமுகவினர் அவைக்கு வரவில்லை - அமைச்சர் ரகுபதி

மானியக்கோரிக்கை விவாதம் - அதிமுக புறக்கணிப்பு

சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்றைய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

மாற்றி பேசும் அமைச்சர் - எடப்பாடி பழனிசாமி

விஷச்சாராய பாதிப்பை முறிப்பதற்கான மருந்து இல்லை என நான் கூறினே. ஆனால், அமைச்சர் மா. சுப்ரமணியன் அல்சர் மருந்து பற்றிய விவரங்களை தெரிவிக்கிறார் - சிபிஐ விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி 

சிபிஐ விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. மாநில காவல்துறை விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது - எடப்பாடி பழனிசாமி

TN Assembly Session LIVE: அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது - இபிஎஸ் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களுக்கு இபிஎஸ் பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், “எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டேன். ஆனால் சபாநாயகர் அனுமதி தர மறுத்துவிட்டார். 


அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது. தட்டுப்பாடு குறித்து நான் சொன்ன மருந்து வேறு. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன மருந்து வேறு. நான் சொன்னது விஷ முறிவு குறித்த மருந்து. ஆனால் அமைச்சர் சொல்வது அல்சர் குறித்த மருந்து. 


விஷச் சாராயம் குறித்து இறந்தவர்களுக்கு காரணம் சொல்கிறார்கள். லேட்டாக சிகிச்சைக்கு வந்ததே காரணம் என சொல்கிறார்கள். அதற்கு முதல் காரணம் மாவட்ட ஆட்சியர்தான். அவர்தான் சொன்னார் இதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று. அதன்பிறகே விஷச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என இருந்துவிட்டார்கள்” எனத் தெரிவித்தார். 

TN Assembly Session LIVE: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது: சட்டப்பேரவையில் சபாநாயகர்

கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது. பேச வேண்டிய நேரத்தில் அனுமதி தருகிறேன் என கூறினார். ஆனால் அதை ஏற்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது. 

TN Assembly Session LIVE: கருப்பு சட்டையுடன் இரண்டாவது நாளாக அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி

3வது நாளாக இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை தள்ளிவைத்து விட்டு கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

TN Assembly Session LIVE: மானிய கோரிக்கைகள் மீது இன்று விவாதம்

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை மீதான மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண் துறை மானிய கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. 


மேலும் கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை, பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி மானிய கோரிக்கை விவாதத்தில் பதில் தர உள்ளனர். மேலும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் விவாத்ததில் பதில் தர உள்ளனர். 

TN Assembly Session LIVE: “கள்ளச்சாராய விவகாரத்தில் இதையெல்லாம் செய்துள்ளோம்” - பட்டியலை படித்த முதல்வர் ஸ்டாலின்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் பேசி வருகிறார். அப்போது பேசிய அவர், ” மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதலமைச்சர். கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்துவிட்டார்.” என தெரிவித்தார்.

பாஜக வெளிநடப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், சரஸ்வதி மற்றும் காந்தி ஆகிய நான்கு பாஜக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்

TN Assembly Session LIVE:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம் - பா.ம.க. வெளிநடப்பு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடிந்த்து உயிரிழந்த விவகாரத்தை கண்டித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்து பாட்டாளி மக்களி கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நிகழ்வு காவல் நிலையம், நீதிமன்றம் இருக்கும் பகுதியிலேயே விற்பனை நடந்துள்ளது என ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அழைப்பு - அதிமுக புறக்கணிப்பு

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அதிமுக எம்.எல்.ஏக்களின் ஒருநாள் சஸ்பெண்டை சபாநாயகர் அப்பாவு ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், மீண்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார். ஆனால், அதிமுக எம்.எல்.ஏக்கள் அந்த அழைப்பை திரும்பப் பெற்றுள்ளனர்.

ஆளுநரை சந்திக்க அதிமுக திட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஞ்சும் எதிர்க்கட்சிகள் - முதலமைச்சர் ஸ்டாலின்

டிசம்பர் 2001 ல் கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் கள்ளச்சாரய மரணங்கள் நிகழ்ந்தன. 52 நபர்கள் அப்போது இறந்தனர். அப்போது உரிய நடவடிக்கை சரியாக எடுக்கவில்லை என்று பேசிவிடுவோமோ என்று அஞ்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், இன்று உரிய நடவடிக்கையை திமுக அரசு எடுத்துள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான விவாதம் தொடங்கியது

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த,  கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீது சட்டப்பேரவையில் விவாதம் தொடங்கியது. 

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி - சபாநாயகர்

அதிமுக எம்.எல்.ஏக்களை ஒருநாள் முழுவது சஸ்பெண்ட் செய்த உத்தரவை, முதலமைச்சர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று ரத்து செய்வதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

அதிமுகவினர் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்துகின்றனர் - ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் அதிமுகவினர் திட்டமிட்டு அவையில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக உறுப்பினர்களை மீண்டும் இன்றே அவைக்குள் அனுமதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுப்பணி அமைச்சர் ஏ.வ. வேலு பதில்

கேள்வி நேரத்தில் எழுப்பபட்ட புதிய பாலங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பொதுப்பணி அமைச்சர் ஏ.வ. வேலு, “தொப்பூர் சாலைக்கு நிலம் எடுக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். தருமபுரி மையப்பகுதியில்  பாலம் அமைப்பதற்கான கோரிக்கை குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கபப்டும். தருமபுரிக்கு கிழக்கு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புறவழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகும், போக்குவரத்து நெரிசல் இருந்தால் மேம்பாலம் அமைக்கப்படும். மதுரை நகரில் பல்வேறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி - அமைச்சர் ரகுபதி

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சரிடம் உள்ளது. மாநிலத்தில் நிதி நிலைக்கு ஏற்ப சட்டக் கல்லூரிகள் அமைக்கப்படும் - சட்ட அமைச்சர் ரகுபதி

அவைக்கு வராத முதலமைச்சர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

மக்கள் சார்பிலான எங்களது கேள்வ்களை எதிர்கொள்ள முடியாத முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவைக்கு கூட வரவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். ஆனால், கேள்வி நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவையில் இருந்ததை சட்டப்பேரவை காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்படும் வரை, ஸ்டாலின் அவையில் இல்லை.

வாய் திறக்காத கனிமொழி - எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டில் தான் அதிக இளம் வயது விதவைகள் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி பேசியிருந்தார். ஆனால், தற்போது அவர் வாயே திறக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி

சிபிஐ விசாரணை ஏன் வேண்டும்? - எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடியில் இரண்டு பேர் இறந்ததற்கே சிபிஐ விசாரணையை திமுக கோரியது. ஆனால், தற்போது 50 பேர் வரையில் இறந்துள்ளனர். இதில் சிபிஐ விசாரணையை கோருவதில் என்ன தவறு. விசாரணையை கோரியதற்கே உதயகுமார் மீது கைது நடவடிக்கை பாய்கிறது. அப்படி இருக்கையில் இவர்களது விசாரணை நேர்மையாக இருக்குமா? - எடப்பாடி பழனிசாமி 

ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

பொறுப்பற்ற கூட்டணி கட்சிகள் - எடப்பாடி பழனிசாமி

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மக்கள் பிரச்னைகள் மீது ஆர்வமில்லை. என்ன நடந்தாலும் கூட்டணி தொடரும் என்ற மனநிலையிலேயே காங்கிரஸ் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மேம்போக்காக பேசுகின்றன. விசிக ஆர்பாட்டம் அறிவித்தாலும் எந்த பயனும் இல்லை - எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராய உயிரிழப்பை மறைக்க முயற்சி - எடப்பாடி பழனிசாமி

திமுக தலைமையிலான அரசு கள்ளச்சாராய உயிரிழப்பை மறைக்க முயற்சி மேற்கொண்டது. அதன்படியே மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்து பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் காரணமாகவே மற்ற அரசு அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்து இருந்தாலும், தங்களது அறிவுறுத்தலின் பேரில் செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை - எடப்பாடி பழனிசாமி

அதிமுக எம்.எல்.ஏ., புகாரளித்தும் நடவடிக்கை இல்லை - எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ., செந்தில்நாதன் ஒரு வாரத்திற்கு முன்பாகவே புகாராளித்தார். ஆனால், அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுகவினருக்கு கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு உள்ளது - எடப்பாடி பழனிசாமி

மருந்துகளுக்கு பற்றாக்குறை - எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்த தேவையான, குறிப்பிட்ட மருந்து கையிருப்பில் இல்லை. ஆனால், அரசு நிர்வாகம் பொய் சொல்கிறது. முதலில் இறந்தவர்கள் பற்றி மாவட்ட ஆட்சியர் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார். உண்மையை மறைக்காமல் இருந்து இருந்தால் பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு இருக்கும் - எடப்பாடி பழனிசாமி

மக்கள் பிரச்னைகளை பேச முடியவில்லை - எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சியில் நகரின் மையப்பகுதியிலேயே, அதுவும் காவல்நிலையத்திற்கு அருகேயும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 50 பேர் உயிரிழந்த நிலையில் பல மருத்துவமனைகளில் வெளிப்படத்தன்மை இல்லை. இதுபற்றி பேசவே முயற்சித்தோம். ஆனால், மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதி வழங்கப்படவில்லை - எடப்பாடி பழனிசாமி

விவாதிக்க நேரம் வழங்கப்படும் - சபாநாயகர் அப்பாவு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது விவாதிக்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அனுமதி வழங்காத சபாநாயகர் - இபிஎஸ்

அரசு உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்பது போன்ற பிரச்னைகளை பேசவே நேரம் கேட்டோம். ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்காமல் எங்களை வெளியேற்றிவிட்டார். எதிர்க்கட்சி துணைதலைவர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டது பெரும் அடக்குமுறை - எடப்பாடி பழனிசாமி

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் சட்டமன்ற அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது என அவைத்தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். 

போலீசாருடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் தள்ளுமுள்ளு

காவல்துறையினர் குண்டுக்கட்டாக வெளியேற்றியபோது அவர்களுக்கும், அதிமுக எம்.எல்.ஏக்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விதிகளை மீற் செயல்படும் அதிமுக எம்.எல்.ஏக்கள் - துரைமுருகன்

கேள்வி நேரத்தில் விவாதிக்க முடியாது என்பது அதிமுகவினருக்கும் தெரியும். ஆனாலும், விதிகளை மீறி செயல்பட்டதன் காரணமாக, வேறு வழியின்றி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர் - அமைச்சர் துரைமுருகன்

அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என, அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

குண்டுக்கட்டாக வெளியேற்றப்படும் அதிமுக எம்.எல்.ஏக்கள்

கேள்வி நேரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அதிமுக, பாஜக, பாமக எம்.எல்.ஏக்கள் அமளி!

கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி விஷயம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர், பாஜகவினர், பாமகவினர் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 


சபாநாயகர் அப்பாவு அமளியில் ஈடுபடுபவர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டும் அதை அவர்கள் கேட்காமல் அமளியில் ஈடுபடுகின்றனர். கேள்வி நேரம் முடித்துவிட்டு நேரமில்லா நேரத்தில் முதல்வர் விவரிப்பார் எனவும் சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் கள்ளக்குறிச்சி விஷயமே முக்கியம் கேள்வி நேரம் முக்கியம் இல்லை என எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 


அமைதி காக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

TN Assembly Session LIVE: கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த இபிஎஸ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என இபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் மாணிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன. இதில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 


இந்நிலையில் இந்த விஷச்சாராய சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். 

TN Assembly Session LIVE: கருப்பு சட்ட அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்த நிலையில், சட்டபேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். விஷ சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என நேற்று வன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தனர். 

TN Assembly Session LIVE: இரங்கல் தீர்மானம் வாசித்த சபாநாயகர் - தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சபாநாயகர் அப்பாவு  முன்னால் எம்.எல்.ஏ.க்கள், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரை இன்று ஒத்திவைக்கப்பட்டது. 

TN Assembly Session LIVE: கள்ளக்குறிச்சி, மாஞ்சோலை விவகாரம் - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இறப்பு, மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரம் ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என சபாநாயகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 

TN Assembly Session LIVE: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம் - இரங்கல் தீர்மானம் வாசிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

கூட்டத்தொடரை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி

மானியக் கோரிக்கை தொடர்பான சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில், அவை நடவடிக்கையை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின், குடும்பத்தினரை நேரில் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் எதிரொலிக்குமா கள்ளச்சாராய விவகாரம்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதால் வழக்கத்தை விட சட்டசபையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் உயிரிழந்த விவகாரம் பெரியளவில் சட்டசபையில் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவை நடவடிக்கைகள் என்ன?

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி முதல் 1 மணி நேரம் கேள்வி – பதில் நேரமாக நடைபெறும். இந்த 1 மணி நேரம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து, அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களிடம் கோரிக்கைகளையும், கேள்விகளையும் முன்வைப்பார்கள். அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள். 1 மணி நேரம் முடிந்த பிறகு, முதலமைச்சர் 110 விதியின் கீழ் ஏதேனும் திட்டங்களை கொண்டு வந்தால், அதற்கான அறிவிப்பை வெளியிடுவார். அதன்பின்பு, 55 விதியின் கீழ் ஏதேனும் சிறப்பு தீர்மானம் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டு, விவாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

முன்கூட்டியே தொடங்கும் அவை நடவடிக்கை

மானியக் கோரிக்கைகள் தொடர்பான சட்டமன்ற கூட்டத்தொடரில், நாளை முதல் சட்டசபை கூட்டத் தொடர் விவாதங்களுடன் நடைபெற உள்ளது. வழக்கமாக, தமிழக சட்டசபை கூட்டத்தொடரானது காலை 10 மணிக்கு தொடங்குவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு சட்டசபை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடர் - முதல் நாள் திட்டம்

மானியக் கோரிக்கைகள் தொடர்பான சட்டமன்ற கூட்டத்தொடரின், முதல் நாளான இன்று சட்டசபையில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்து காலமான புகழேந்தி மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல் நாளான இன்று சட்டசபை ஒத்திவைக்கப்படும்.

இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!

தமிழக அரசின் சட்டசபை ஆண்டுதோறும் ஜூன் மாதம் கூடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டம் வரும் ஜூன் 20ம் தேதி கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக சட்டசபை கூட்டம் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடுகிறது.

Background

Tamil Nadu Assembly Session LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.


தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடர்:


முதல் நாளான வியாழக்கிழமை சட்டசபையில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்து காலமான புகழேந்தி மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல் நாள் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.


இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 21) முதல் சட்டசபை கூட்டத் தொடர் விவாதங்களுடன் தொடங்கியது. வழக்கமாக, தமிழக சட்டசபை கூட்டத்தொடரானது காலை 10 மணிக்கு தொடங்குவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு சட்டசபை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கே தொடங்கும் என்று ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.


எப்படி செயல்படும்?


 வழக்கமாக, சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய முதல் 1 மணி நேரம் கேள்வி – பதில் நேரமாக நடைபெறும். இந்த 1 மணி நேரம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து, அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களிடம் கோரிக்கைகளையும், கேள்விகளையும் முன்வைப்பார்கள். அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்.


1 மணி நேரம் முடிந்த பிறகு, முதலமைச்சர் 110 விதியின் கீழ் ஏதேனும் திட்டங்களை கொண்டு வந்தால், அதற்கான அறிவிப்பை வெளியிடுவார். அதன்பின்பு, 55 விதியின் கீழ் ஏதேனும் சிறப்பு தீர்மானம் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டு, விவாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. 110 விதி மீதான அறிவிப்பு மற்றும் 55 விதியின் கீழ் சிறப்பு தீர்மானம் என்பது தினசரி நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.  அதன்பின்பு, ஒவ்வொரு துறை சார்ந்த மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும்.


இனி காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர்:


22-ந் தேதியில் இருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். அதன்பின்பு, மாலை 5 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். 


இந்த சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான 29ம் தேதி மட்டும் காலையில் சட்டசபை கூட்டம் நடைபெறும். இந்த சட்டசபை கூட்டத்தொடரில் மொத்தம் 16 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதில் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.


சட்டசபையில் எதிரொலித்த கள்ளச்சாராய விவகாரம்


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதால் வழக்கத்தை விட சட்டசபையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் மிகவும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்த விவகாரம் பெரியளவில் சட்டசபையில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.