TN Assembly Session LIVE: விவசாயிகளைப்போல மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், நாசர் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.
ஐந்து மாவட்டங்களில் 50 கோடி ரூபாய் செலவில் மீன் சந்தைகள் அமைக்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
விவசாயிகள் கடன்பெற வங்கிக்கு செல்லாத அளவுக்கு தன்னிறைவு பெற்ற விவசாயிகளை உருவாக்குவோம் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
நெல்லையில் ரூ. 5 கோடி செலவில் வண்ணமீன் காட்சியம் அமைக்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அம்பேத்கரின் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
சமத்துவ நாள் அறிவிப்புக்கு அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு
விவசாயிகளைப்போல மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
கச்சத்தீவை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கோடை மழையால் அதிகளவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் பாதிக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க எனவும் பழனிசாமி வலியுறுத்தினார்.
கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி
கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பேரவையில் உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ரவி, சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜ கூறினார்.
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்.
பாலிடெக்னிக் படிப்புகளை மேம்படுத்த புதிதாக 5 துறைகளை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்- உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் கேள்விகளை அந்தத்துறைக்கான அமைச்சர்களிடம் தெரிவித்து வருகின்றனர்
Background
தமிழ்நாடு சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால் வளத்துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் கலந்துகொண்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், நாசர் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -