TN Assembly: மாறிய கட்சி.. மாறாத விசுவாசம்! செங்கோட்டையன் பையில் ஜெ! ஓபிஎஸ் பையில் ஸ்டாலின்-பேரவையில் பரபரப்பு!
அதிமுகவிலிருந்து விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்தாலும் செங்கோட்டையன் ஜெயலலிதாவின் மீதுள்ள விசுவாசத்தை காட்டிவரும் வேளையில் மறுப்பக்கம் ஓபிஎஸ் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்துள்ளார்

தமிழ்நாடு சட்டசபையில் இன்று எம்,எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் இருவரின் செயல்பாடுகள் கவனம் ஈர்த்து வருகிறது.
இன்றைய தினம் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். முதலில் முதலமைச்சர் விஜய், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
தொடரும் செங்கோட்டையனின் விசுவாசம்
அரசியலில் புதிதாக களம் கண்ட முதலமைச்சர் விஜய்க்கு பக்கபலமாக செங்கோட்டையன் இருந்தார். அவர் நேற்று நடந்த அமைச்சர் பதவியேற்பு விழாவில் பதவியேற்ற போது சட்டைப்பையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜெயலலிதாவின் விசுவாசியான இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சரானபோதும் ஜெயலலிதா மீதான அன்பும், மரியாதையும் இன்னும் குறையவில்லை. இதனை பிரதிபலிக்கும் வகையில் அமைச்சராக பதவியேற்றபோது அவரது சட்டை பையில் ஜெயலலிதா படம் இருந்தது.
Sengottaiyan Jayalalitha | செங்கோட்டையன் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் | TVK Vijay#sengottaiyan #vijay #tvk #tnassembly #jayalalitha pic.twitter.com/TqB4XGUdrn
— ABP Nadu (@abpnadu) May 11, 2026
கட்சியில் சேர்ந்த புதிதில் செங்கோட்டையன் தன் பையில் ஜெயலலிதா படம் வைப்பதைப் பற்றி விஜயிடம் தெரிவித்துள்ளார். அவர் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள் என சொன்னதாக ஒரு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ் சட்டைப்பையில் ஸ்டாலின்:
அதே போல் ஒரு காலத்தில் அதிமுகவின் முக்கிய நபராக ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றினார், அதன் பின்னர் கட்சியில் இருந்து ஏற்பட்ட பிளவுகள் காரணமாக அதிமுகவில் இருந்து வெளியேறினார். ஒபிஎஸ் அணி இபிஎஸ் அணி என்று இரண்டாக பிரிந்தது, அதன்பின்னர் பாஜக கூட்டணியில் சேர்ந்து எம்.பி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்த அவர் இன்று எம் எல் ஏ-வாக பதவியேற்றார். அப்போது அவரது சட்டப்பையில் ஜெயலலிதா படத்திற்கு பதிலாக மு.க ஸ்டாலினின் படத்தை வைத்திருந்தார்.
இருவருமே அதிமுகவிலிருந்து விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்தாலும் செங்கோட்டையன் ஜெயலலிதாவின் மீதுள்ள விசுவாசத்தை காட்டிவரும் வேளையில் மறுப்பக்கம் ஒபிஎஸ் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்தது தீவிர அதிமுக தொண்டர்களிடம் பேசுப்ப்பொருளாகி உள்ளது
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்























