மேலும் அறிய

TN Election 2026: 20 தொகுதிகளில் பாஜகவின் நிலைமை..! ஆட்டம் போடும் டெல்லி, டான்ஸ் ஆடும் களநிலவரம் - 2026 எப்படி?

TN Assembly Election 2026 BJP: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2021 பொதுத்தேர்தலின் போது பாஜக போட்டியிட்ட தொகுதிகளின் முடிவுகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Assembly Election 2026 BJP: கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பாஜக போட்டியிட்ட தொகுதிகள், பெற்ற வாக்கு சதவிகிதம் உள்ளிட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தல் 2026:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி நெருங்கிக் கொண்டுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என, நான்கு முனை போட்டி நிலவுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கூட்டணியில் எப்படியும் கடந்த முறையை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை பெற்று விட வேண்டுமென, தேசிய கட்சிகள் தொடங்கி சிறிய மாநில கட்சிகள் கூட முனைப்பு காட்டி வருகின்றன. குறிப்பாக மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டதை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் தான் இந்தமுறை போட்டியிட வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான தனது அத்தனை பலத்தையும் பயன்படுத்தவும் டெல்லி தலைமை தயாராக உள்ளதாம். இந்நிலையில், 2021ம் ஆண்டில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள், களமிறங்கிய வேட்பாளர்கள், வெற்றியாளர்கள் மற்றும் பெற்ற வாக்கு சதவிகிதம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

அதிமுக ஒதுக்கிய 20 தொகுதிகள்:

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது பாமகவிற்கு அடுத்தபடியாக அதிமுக கூட்டணியில் இருந்த, மிகப்பெரிய கட்சியாக பாஜக கருதப்பட்டது. அதன்படி அந்த கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழ்நாடு அரசியலில் பாஜகவிற்கு இது மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்பட்டது. ஆனால், முடிவுகள் டெல்லி தலைமை எதிர்பார்த்ததை போல அமையவில்லை. போட்டியிட்ட இடங்களில் ஐந்தில் ஒரு பங்கில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மேலும், புதியதாக தொடங்கப்பட்டு இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையான, 2.62 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தது.

பாஜகவின் வெற்றி வேட்பாளர்கள்

தொகுதி வேட்பாளர்கள்  பெற்ற வாக்குகள் வாக்கு வித்தியாசம் முடிவுகள்
கோயம்புத்தூர் தெற்கு வானதி ஸ்ரீனிவாசன் 53,209 1,540 வெற்றி
திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் 92,282 23,402 வெற்றி
நாகர்கோவில் எம்.ஆர். காந்தி 88,804 11,669 வெற்றி
மொடக்குறிச்சி சி. சரஸ்வதி 78,125 281 வெற்றி

மண்ணை கவ்விய 16 வேட்பாளர்கள்

தொகுதிகள் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் தோல்வியில் வாக்கு வித்தியாசம் வெற்றியாளர்
சென்னை துறைமுகம் வினோஜ் பி. செல்வம் 32,043 27,274 சேகர்பாபு, திமுக
ஆயிரம் விளக்கு குஷ்பு சுந்தர் 39,405 32,462 எழிலன், திமுக
அரவக்குறிச்சி அண்ணாமலை 68,553 24,816 இளங்கோ, திமுக
தாராபுரம் (தனி) எல்.முருகன் 88,063 1393 கயல்விழி, திமுக
காரைக்குடி எச். ராஜா 54,365 21,589 மாங்குடி, காங்கிரஸ்
வடக்கு மதுரை சரவணன் 50,094 22,916 தளபதி, திமுக
தளி நாகேஷ்குமார் 64,415 56,226 ராமச்சந்திரன், சிபிஐ
ஊட்டி போஜராஜன் 60,182 5,348 ஆர். கணேஷ், காங்கிரஸ்
திருவண்ணாமலை தனிகைவேல் 43,203 94,673 எ.வ. வேலு, திமுக
திருக்கோயிலூர் கலிவர்தன் 51,300 59,680 பொன்முடி, திமுக
திட்டக்குடி பெரியசாமி 62,163 21,563 சி.வி. கணேசன் திமுக
திருவையாறு பூண்டி எஸ். வெங்கடேசன் 49,560 53,650 துரை சந்திரசேகரன், திமுக
விருதுநகர் பாண்டுரங்கன் 51,958 21,339 சீனிவாசன், திமுக
ராமநாதபுரம் குப்புராம் 60,603 50,479 காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், திமுக
குளச்சல் ரமேஷ் 65,849 24,832 ப்ரின்ஸ்,காங்க்லிரஸ்
விளவங்கோடு ஜெயசீலன் 58,804 28,69 விஜயதாரணி, காங்கிரஸ்

ஆட்டம் போடும் டெல்லி..

கடந்த தேர்தலில் 14 இடங்களில் திமுக உடன் நேரடியாக போட்டியிட்டு, வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களில் கூட நயினார் நாகேந்திரன் மற்றும் காந்தி ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிலான வாக்கு வித்தியாசத்தில் எதிராளியை வீழ்த்தியுள்ளனர். சரஸ்வதி மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் மிகவும் கணிசமான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியை வசப்படுத்தியுள்ளனர். அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, பாஜக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என டெல்லி தலைமை தீவிரமாக முயன்று வருகிறது. அதன்மூலம் வாக்கு சதவிகதத்தை அதிகரித்து, மாநிலத்தில் பலமான தேசிய கட்சி எனவும் நிரூபிக்க பார்க்கிறது.

டான்ஸ் ஆடும் களநிலவரம்

அதேநேரம், அதிமுக கூட்டணி இல்லாவிட்டால் பாஜக இன்னும் தமிழ்நாட்டில் ஒர் பலவீனமாக கட்சியாகவே உள்ளது. அதற்கு உதாரணமாக தான் 2024 நாடாளுமன்ற தேர்தல் அமைந்தது. அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனது தலைமையில் சுயமாக கூட்டணி 23 தொகுதிகளில் பாஜக களம் கண்டது. ஆனால், அதில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்கமுடியாமல் படுதோல்வி கண்டனர். ஆனாலும், தங்கள் கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டது என வலுவாக பேசி, அதிமுகவிடமிருந்து கூடுதல் தொகுதிகளை பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. புதிய கட்சிகளின் ஆதரவு ஏதுமின்றி, கடந்த 2021ம் ஆண்டு கூட்டணி அதிமுகவில் அப்படியே தொடர்கிறது. அப்ப்டி இருந்தும் பாஜக தனது வெற்றியை மேலும் விரிவுபடுத்துமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டது?

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பாஜக அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இது அக்கட்சிக்கு ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்பட்டது.

2021 தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகள் யாவை?

2021 தேர்தலில் பாஜக கோயம்புத்தூர் தெற்கு, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2021 இல் பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் என்ன?

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக, 2.62% வாக்குகளைப் பெற்று, புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையான வாக்கு சதவீதத்தை அடைந்தது.

2026 தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. டெல்லி தலைமை இதற்காக முழு பலத்தையும் பயன்படுத்த தயாராக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK MDMK Alliance: வைகோவின் மதிமுக-விற்கு 4 சீட்டு.. இறுதியானது தொகுதிப் பங்கீடு! திமுக ஹாப்பி அண்ணாச்சி!
DMK MDMK Alliance: வைகோவின் மதிமுக-விற்கு 4 சீட்டு.. இறுதியானது தொகுதிப் பங்கீடு! திமுக ஹாப்பி அண்ணாச்சி!
"சிறப்பு மதிப்பெண் வேண்டாம்.. சிறப்புத் தேர்வு நடத்துங்கள்" - ஆசிரியர் செந்தில்குமார் யோசனை.
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget