TN Assembly Centenary Celebrations LIVE : கலைஞர் மு.கருணாநிதியின் படத்தை திறந்து வைத்ததில் மகிழ்கிறேன் - ராம்நாத் கோவிந்த்
தமிழ்நாட்டில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தொடர்பான உடனடி செய்திகளை லைவ் பிளாக் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு அளித்த புத்தகம் Early Writing System: A journey from Graffiti to Brahmi. தமிழின் ஆரம்பகால எழுத்து வளர்ச்சி பற்றிய விரிவான ஆய்வு நூலாக பார்க்கப்படுகிறது.
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்
என்ற பாரதியார் பாடலை மேற்கொள் காட்டி விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் படத்தை திறந்து வைத்ததில் மகிழ்கிறேன் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் பேசினார்.
ஆளுநர் பெருமிதம்: பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தொழிலாளர் நலன்களுக்கு பல்வேறு நல வாரியங்கள், இலவச தொலைக்காட்சி,சாதி ஒழிப்புக்கு சமத்துவபுரம்- எல்லாம் அருமையான திட்டங்கள்.... மற்ற மாநிலங்கள் இதனை பின்பற்ற வேண்டும்.
கலைஞர் கருணாநிதி படத்திற்கு கீழ் 'காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது
காமராஜர், அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை எண்ணி தமிழக மக்கள் பெருமைப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
இன்றும் நம்முன்னால் நின்றுகொண்டு கலைஞர் வழிநடத்தி வருகிறார். இந்தியாவின் முதல் குடிமகன் கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன் என ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பொன்னாடை, புத்தகம் மற்றும் நினைவுப் பரிசை வழங்கி கவுரவித்தார்.
விழாவினை சிற்பிக்க வந்த குடியரசுத் தலைவரையும், ஆளுநரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போதைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை அழைத்து தமிழ்நாடு சட்டபேரவை தொடங்கப்பட்டதன் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கான வைரவிழாவை நடத்தி இருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டில்தான் சட்டமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கான விழா கொண்டாடப்பட்ட நிலையில் 9 ஆண்டுகளுக்குள் எப்படி சட்டமன்றம் நூறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், விவரங்களுக்கு : https://tamil.abplive.com/news/tamil-nadu/confusion-in-tamil-nadu-assembly-centenary-celebrations-get-to-know-in-details-9935
ஆளுநர் மாளிகையில் இருந்து நூற்றாண்டு விழாவுக்குப் புறப்பட்டார் குடியரசுத் தலைவர்.
சென்னையில் இன்று நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றவுள்ள குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.
ஒட்டுமொத்த உலக தமிழர்களுக்கும் ஒப்பற்ற வரலாறாக மாறிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வரலாறு மட்டுமல்ல நிகழ்காலம், எதிர்காலம் என எல்லா காலத்திற்குமான நிரந்தர தேவை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் புத்தகமும்,
தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர் நீல பத்மநாபன் (நீலகண்டப்பிள்ளை பத்மநாபன்) எழுதிய தலைமுறைகள் என்ற நாவலும்,
இலக்கிய விமர்சகரும், எழுத்தாளருமான சி.எஸ் செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்ற நாவலும்,
புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா.(ஜானகிராமன்) எழுதிய 'செம்பருத்தி' என்ற நாவலும்,
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படும் கி.ரா எழுதிய 'கரிசல் கதைகள்' என்ற புத்தக தொகுப்பும்,
பெண் எழுத்தாளார் ராஜம் கிருஷ்ணன் எழுதிய சூழலில் 'சுழலில் மிதக்கும் தீபங்கள்' என்ற நாவலையும் முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் இன்று மாலை நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவில், அ.தி.மு.க. பங்கேற்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
Background
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார். இதையடுத்து, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக குடியரசுத் தலைவர் இன்னும் சற்றுமுன் சென்னை வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -