மேலும் அறிய

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 5 லட்சம் பேருக்கு நாய்க்கடி.. 40 பேர் மரணம் - உஷாரா இருங்க மக்களே!

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 5 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

ஒரு ஆண்டில் 5 லட்சம் பேருக்கு நாய்க்கடி:

இந்த நிலையில், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாய் கடிப்பது மட்டுமின்றி அந்த நாயால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு அபாயமும் ஏற்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4.80 லட்சம் மக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். 

40 பேர் மரணம்:

கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் உயிரிழந்த 40 பேரில் 18 பேர் மட்டும் கடந்த 6 மாதத்தில் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தனர். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக சேலம் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டும், தஞ்சாவூரும் உள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 5 ஆயிரத்து 970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலே நாய்க்கடி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக உள்ள சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பு நடவடிக்கைகளும் அதிகளவில் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாய்க்கடியால் அதிக பாதிப்பு:

சேலம் - 19 ஆயிரத்து 250 

செங்கல்பட்டு - 13 ஆயிரத்து 064

தஞ்சாவூர் - 11 ஆயிரத்து 441

திருச்சி - 11 ஆயிரத்து 371

கன்னியாகுமரி - 10 ஆயிரத்து 580

நாய்க்கடி குறைவான பாதிப்பு உள்ள மாவட்டங்கள்:

மயிலாடுதுறை - 2 ஆயிரத்து 197

நாகப்பட்டினம் - 2 ஆயிரத்து 360

சென்னை - 5 ஆயிரத்து 970

மதுரை - 6 ஆயிரத்து 633

கோவை - 8 ஆயிரத்து 690

மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்:

இதனால், பொதுமக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் ஆகும். இல்லாவிட்டால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படு்ம் அபாயம் உள்ளது. 

நாய்களைப் பொறுத்தவரை, அவைகள் பிறந்த முதல் ஆண்டில் ரேபிஸ் தடுப்பூசி 2 முறை செலுத்த வேண்டும். அதன்பின்பு, ஆண்டிற்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த தடுப்பூசியை சில நாய்களுக்கு செலுத்தாத காரணத்தினால் அந்த நாய்கள் கடிப்பதால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. 

நாய் கடித்தால் மட்டும்தான் ரேபிசா?

ரேபிஸ் நோய் பாதிப்பு என்பது நாய் கடிப்பதால் மட்டுமே ஏற்படும் பாதிப்பு இல்லை. ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நாய் மட்டுமின்றி ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய் மற்றும் வவ்வால் ஆகியவை கடித்தாலும் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகும். இதனால், நாய் மட்டுமின்றி எந்த பிராணி கடித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் ஆகும். இல்லாவிட்டால் பின்னாளில் அது ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்தும். 

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் போதியளவு ரேபிஸ் தடுப்பு மருந்துகள் இருப்பதால் அனைத்து  வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் எடுக்கப்பட்டு வருகிறது. நாய்க்கடி பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநகராட்சி சார்பில் நாய்களை பிடித்து அதற்கு தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget