கோடை வெயில் தொடங்கி கொளுத்தி கொண்டு வரும் நிலையில், வெப்பநிலையானது பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியது. 


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயில் வெளுத்து கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இன்று சனிக்கிழமை 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக  ஈரோட்டில் 107.6  டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியது.  


சதமடித்த இடங்கள்:


1.ஈரோடு: 107.6°F


2.சேலம்: 106.9°F


3.திருப்பத்தூர்: 106.9°F


4.வேலூர்: 106.3°F


5.திருத்தணி: 104.7°F


6.தர்மபுரி: 105.3°F


7.திருச்சிரப்பள்ளி AP: 105.3°F


8.நாமக்கல்: 105.8°F


9.கரூர் பரமத்தி: 104.0°F


10.தஞ்சாவூர்: 104.0°F


11.மதுரை விமான நிலையம்: 103.6°F


12.கோயம்புத்தூர் AP: 103.3°F


13.சென்னை ஆந்திரம்: 102.2°F


14.மதுரை நகரம்: 101.5°F


15.பாளையம்கோட்டை: 100.0°F


இந்நிலையில், வானிலை  நிலவரம் குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, தென் இந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடானது நிலவுகிறது.


அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் 3° – 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும். இதர பகுதிகளில் ஒருசில  இடங்களில் 2° – 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும்.


அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் 40°– 41° செல்சியஸ், உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°–40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34°–37° செல்சியஸ் இருக்கக்கூடும் என தெரிவித்தது.


மழைக்கு வாய்ப்பு:


தென் தமிழக மாவட்டங்கள்,   வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்தது. 


தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களில் தென் தமிழக மாவட்டங்கள்,    வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும்,லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் , இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.