தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் குன்றத்தூர் பகுதியில் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக, தாம்பரம் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
என்னென்ன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது ?
போக்குவரத்து மாற்றம் குறித்து தாம்பரம் மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: குன்றத்தூர் நகராட்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஜூன் 15 முதல் புதிய ஒருவழிப் போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
பூந்தமல்லியில் இருந்து குன்றத்தூர் பேருந்து நிலையம் மற்றும் பல்லாவரம் செல்லும் வாகனங்கள் சாந்தி ஜுவல்லரி இடதுபுறம் திரும்பி, அம்மன் கோவில் சாலை வழியாகச் சென்று, பேருந்து நிலையத்தில் வலதுபுறம் திரும்பி, மீண்டும் இடதுபுறம் திரும்ப வேண்டும்; பல்லாவரம் செல்லும் வாகனங்கள் மின்சார வாரிய அலுவலகம் அருகே இடதுபுறம் திரும்ப வேண்டும்.
பல்லாவரம் முதல் குன்றத்தூர் வரை செல்லும் வாகனங்கள் தேரடி அருகே வலதுபுறம் திரும்பி பேருந்து நிலையம் நோக்கிச் செல்ல வேண்டும்.
இதேபோல், பல்லாவரம் முதல் பூந்தமல்லி மற்றும் போரூர் செல்லும் வாகனங்கள் தேரடிக்கு எதிரே இடதுபுறம் திரும்பி, பேருந்து நிலையம் மற்றும் வலதுபுறம் திரும்பி பஜார் சாலை வழியாக சென்று, கொல்லைச்சேரி, பூந்தமல்லி மற்றும் போரூர் செல்ல வேண்டும்.
குன்றத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பல்லாவரம் செல்லும் வாகனங்கள் தேரடி, பஜார் சாலை வழியாகச் சென்று, சாந்தி ஜுவல்லரி அருகே வலதுபுறம் திரும்பி, அம்மன் கோவில் சாலை வழியாகச் சென்று, மின்சார வாரிய அலுவலகம் அருகே இடதுபுறம் திரும்ப வேண்டும்.
புதிய போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு தாம்பரம் மாநகர காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.