" ஆம்பளன்னா அப்படித் தான் இருப்பாங்க " - மாமியார் பேச்சால் மனமுடைந்த இளம் பெண் எடுத்த முடிவு
இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட திருமணமான பெண்ணுடனான தொடர்பால் மன உளைச்சலுக்கு ஆளான காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை

சமூக வலைத் தளங்களில் பெண்களுடன் தொடர்பு
தாம்பரம் பழைய பெருங்களத்தூர் எத்திராஜ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கார்த்திக்ராஜா ( வயது 30 ) பி.காம் பட்டதாரியான இவர் பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) 26 வயதான பெண் பட்டதாரி ஆவார். இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் கீர்த்தனா , 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். குடும்ப எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு தனியாக வீடு எடுத்து வசித்து வந்த இத்தம்பதியரின் குடும்ப வாழ்க்கை ஆரம்பத்தில் சுமூகமாக சென்றதாக கூறப்படுகிறது.
கஞ்சா பழக்கம் - பெண்களுடன் நெருங்கிய தொடர்பு - சிக்கிய மொபைல் போன்
கார்த்திக் ராஜா கஞ்சா பழக்கத்திலும் , இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிலும் அதிகமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சமூக வலை தளங்களில் பெண்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். அவரது செல்போனை குழந்தைக்கு விளையாட கொடுத்த போது, அதை பார்த்த மனைவிக்கு பல பெண்களுடன் வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் உரையாடி வந்தது தெரிய வந்துள்ளது. அதில் திருமணமான பெண் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
" ஆம்பளனா அப்படி தான் இருப்பாங்க "
இது குறித்து கார்த்தி மனைவி தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், "ஆம்பளனா அப்படி தான் இருப்பாங்க கண்டுகொள்ளாமல் போ , இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் " என அவர்கள் அலட்சியமாக பேசி தவிர்த்துள்ளனர். மேலும், இதைக் குறித்து மகன் கார்த்திக்கிடம் " ஏண்டா நீ செல்போனை லாக் போட்டு வைக்க மாட்டியா " என செல்வி காது பட பேசியதையும் கேட்டு மனமுடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெரிதும் மனம் உடைந்த செல்வி கணவனிடம் உரிமையுடன் நான் காதலித்து தானே கல்யாணம் செய்தேன் என மனம் உருகி நியாயம் கேட்டுள்ளார். அதற்கு " நீ வேண்டாம் அவள் தான் வேணும் " என்று கண்ட பெண்ணுக்காக கட்டிய மனைவி கண்ணத்தில் அடித்துள்ளார். இதனால் மன உளைச்சளுக்கு ஆளான கீர்த்தனா குழந்தையை ஹாலில் விட்டு கோபமாக அறைக்கு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் குடும்பத்தினர் பதறி போய் உள்ளனர். பின்னர் கார்த்திக் ராஜா கீர்த்தனா பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். கீர்த்தனா அம்மா மற்றும் உறவினர்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது புடவையால் செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து கீர்த்தனா தாய் தேவி , பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் கீர்த்தனா உடலை கைப்பற்றி, தற்கொலை குறித்த கடிதங்களையும் மீட்டுள்ளனர். உடல் உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கார்த்திக் ராஜாவை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் பெண் உயிரிழந்துள்ளதால் தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற உள்ளது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















