தமிழ்நாட்டில் பொதுவாக ஏப்ரல், மே மாதம் கோடை காலம் ஆகும். மற்ற மாதங்களைக் காட்டிலும் இந்த மாதத்தில் வெயில் அதிகளவு இருக்கும். கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் அதிகளவு வாட்டி வதைத்து வரும் நிலையில், மே மாதத்தில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பழங்கள் விற்பனை படுஜோர்:
கோடை காலம் வந்தாலே தமிழ்நாட்டில் பழங்களின் விற்பனை வழக்கத்தை காட்டிலும் பன்மடங்கு இருக்கும். வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பழங்களின் விற்பனை பல மடங்கு இருக்கும். தர்பூசணி பழத்தின் விற்பனை ஆண்டின் மற்ற மாதங்களைக் காட்டிலும் இந்த மாதம் பல மடங்கு அதிகளவு இருக்கும்.
விலை எப்படி?
பப்பாளி, அன்னாசிப்பழம், மாதுளை, கிர்ணி, ஆப்பிள் ஆகிய பழங்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. பழச்சாறு கடைகளில் இந்த பழச்சாறுகளின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பழங்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
தர்பூசணி பழம் மொத்தமாக வாங்கினால் 30 ரூபாயும், தனியாக வாங்கும்போது ரூபாய் 60-க்கும் விற்கப்படுகிறது. பப்பாளி பழம் மொத்தமாக வாங்கினால் ரூபாய் 30க்கும், மொத்தமாக வாங்கினால் ரூபாய் 40-க்கும் விற்கப்படுகிறது. அன்னாசிப்பழம் தனியாக வாங்கினால் ரூபாய் 70-ம், மொத்தமாக வாங்கினால் ரூபாய் 50-க்கும் விற்கப்படுகிறது. ஆப்பிள் தனியாக வாங்கினால் கிலோ ரூபாய் 140க்கும் மொத்தமாக வாங்கினால் ரூபாய் 100-க்கும் விற்கப்படுகிறது.
இளநீருக்கு டிமாண்ட்:
பழங்கள் மட்டுமின்றி இளநீர் விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது. பொதுவாக கோடைக்காலம் என்றாலே இளநீர் விற்பனை மின்னல் வேகத்தில் நடப்பது வழக்கம். இந்த முறை இளநீர் விற்பனை அதிகளவு நடந்து வருகிறது. அதேசமயம் போதுமான அளவு இளநீர் விற்பனைக்கு கிடைக்கவில்லை என்று விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 1000 இளநீர் கடைக்காரர் கேட்டால் 500 இளநீர் மட்டுமே கிடைப்பதாக கூறுகின்றனர். இதனால், இளநீர் விலை சற்று ஏறியுள்ளது.
கோடை காலம் என்றால் மாம்பழ விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது. தற்போதே மாம்பழ விற்பனை நன்றாக நடந்து வரும் சூழலில், அடுத்த மாதம் அதிகளவு நடக்கும் என்று கருதப்படுகிறது.
Chitra Pournami 2026 Date: பக்தர்களே! சித்ரா பெளர்ணமி எப்போது? எப்படி சாமி கும்பிட வேண்டும்?
