வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.ந..மகேஸ்வரன், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2023 – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர், தலைமை வகித்தார்கள்.
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2023 – அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்காக தயார் நிலையில் உள்ள 134- அரவக்குறிச்சி, 135- கரூர், 136- கிருஷ்ணராயபுரம், 137- குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்களை, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் திரு. சி.ந.மகேஸ்வரன், அவர்கள் மேலாய்வு செய்தார்கள். என கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர், தெரிவித்துள்ளார்.
2023 தொழிற்பள்ளி – அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2023 முதல் 28.02.2023 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும்.
அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000/- மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000/- செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.02.2023. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் தொலைபேசி எண் : 044-22501006 (113), Email : detischennai@gmail.com மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர். தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.தண்டயுதாபாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.ரூபினா(கரூர்), திருமதி.புஷ்பாதேவி மற்றும் வட்டாட்சியர் (தேர்தல்) திரு.விஜயா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் (Ombudsman) பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக N.பாலசுந்தரம் என்பவர் கரூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண் 8925811311 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudspersonkarur@gmail.com ஆகும் .
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.