வங்கக்கடலில் உருவான அர்னாப் புயலானது வலுப்பெற்று தீவிரப்புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர், புயலாக உருவெடுத்த நிலையில் தற்போது தீவிரப்புயலாக மாறியது அர்னாப்.  

Continues below advertisement

12 மணி நேரத்தில் மிகத்தீவிர புயலாக மாற்றம்?

17 கி.மீ வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் மிகத்தீவிர புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 500 கிமீ தொலைவில் அர்னாப் புயல் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.28 ஆம் தேதி கரையை கடக்க உள்ள புயல்

ஆந்திர மாநிலம் அருகே கரையை கடக்கும் போது சுமார் 140 கி.மீ வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்புயல் வருகிற 28-ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் - பாபட்லா இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Continues below advertisement