Sterlite Live Updates: ஸ்டெர்லைட்டில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி - தமிழக அரசு.
ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்த நிலையில் இந்த இடைக்கால மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது. இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றுது
இப்போது ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்படும் அனுமதியை எக்காரணம் கொண்டும் ஒரு முன்னுதாரணமாக வைத்து - ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி கோரக்கூடாது என்று அரசு உத்தரவிலேயே தெளிவுபடுத்திட வேண்டும் - திமுக
கொரோனா பேரிடரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்னையைச் சமாளிக்க ஸ்டெர்லைட் ஆலை 4 மாதம் மட்டும் ஆக்சிஜன் உற்பத்திச் செய்யலாம்” என தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க திங்கள் கிழமை அனுமதி அளிக்கப்பட்டாலும் திறக்க விட மாட்டோம், அடுத்த போராட்டம் நடத்த அரசே காரணமாக அமைந்து விட வேண்டாம் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்
நாடு முழுக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கிறது, இந்நிலையில் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது, இந்த சமயத்தில் நாட்டின் நலனை பார்க்காமல் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி இந்த கோரிக்கையை தவிர்க்காதீர்கள் - உச்சநீதிமன்றம்
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆலை நிர்வாகம் கேட்கிறது, அதனை மத்திய அரசு ஏற்கிறது. என்ன நடக்கிறது ? - மகுவா மொய்த்ரா கேள்வி
”ஆலையை திறக்க மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள், ஆலை திறக்கப்பட்டால் அது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும், முன்னர் நடந்தது போல் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடக்க தமிழக அரசு விரும்பவில்லை” - தமிழக அரசு
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்தலாமா ? , நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாஅடு நிலவும் சூழலில் இது போன்ற முடிவை அரசு எடுக்கலாமே என உச்சநீதிமன்றம் கேள்வி
”ஆக்சிஜன் தேவையை தயாரிப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பதிலாக , நாட்டின் வேறு பகுதியில் தயாரிக்கலாம். ஆலையை திறக்கலாம் என மத்திய அரசு சொன்னதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. மக்களின் கருத்துகளை பெற்றூ உச்சநீதிமன்றத்தில் தருகிறோம்” - தமிழக அரசு
Background
ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் பெரும்பாலான மக்கள் வலியுறுத்தினர். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆதாரவளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், ஸ்டெர்லைட் ஆலைகளை திறந்தால் அதன் மூலம் நாட்டு மக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கும், எங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆவேசத்துடன் பேச ஆரம்பித்தனர். இதனால் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கைகலப்பு நிலவியது. போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என பெரும்பாலான மக்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -