மேலும் அறிய

கர்நாடகா சென்றால் ’கோ பேக் ஸ்டாலின்’ சொல்வோம் - எச்சரிக்கும் அண்ணாமலை

முதலமைச்சருக்கு எதிராக ”கோ பேக் ஸ்டாலின்” சொல்வோம் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்துக்கு காவிரி நீர் தராமல் வஞ்சிக்கும் கர்நாடகாவுக்கு முதலமைச்சர் சென்றால் “கோ பேக் ஸ்டாலின்” என முழக்கமிடுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி என கூறியதுடன், மேகதாது அணை கட்டுவது தொடர்பான திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சரை சந்தித்து விளக்கியுள்ளார். மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும்,  கர்நாடக அரசின் நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும்,  நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவிரி நீர் விவகாரத்தில் பாஜக எந்தவித அரசியலையும் செய்யவில்லை என்றார்.  முதலில் மேகதாது பிரச்சனையை ஆரம்பித்ததே காங்கிரஸ் தான் என குற்றம்சாட்டிய அண்ணாமலை, தேர்தல் வாக்குறுதியாக மேகதாது அணை கட்டப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதாக தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறி இருந்ததாக சுட்டிக்காட்டினார்.  அதன்படி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார். இதேபோல், நடப்பு ஆண்டின் காவிரி நீர் தமிழகத்துக்கு வழங்க முடியாது என கர்நாடகா அடம்பிடிப்பதாக கூறிய அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டி.கே. சிவகுமாரையும், காங்கிரஸ் கட்சியையும் கண்டிக்க மனம் இல்லை என்றார்.

இந்த சூழலில், வரும் 11ம் தேதி பெங்களூருவில் நடக்க கூடிய அனைத்து எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு எப்படி முதலமைச்சர் செல்ல முடியும் என்றும் தமிழ்நாட்டை தாரை வார்த்து விட்டு செல்வாரா...? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தனது அரசியல் லாபத்திற்காக கர்நாடகாவுக்கு சென்று விட்டு தமிழகம் திரும்பினால் முதலமைச்சருக்கு எதிராக “கோ பேக் ஸ்டாலின்” சொல்வோம் என எச்சரித்தார். ஒவ்வொரு பாஜக தொண்டனும், விவசாயிகளும் முதலமைச்சருக்கு எதிராக நிற்போம் என்றும், கருப்பு கொடிக்காட்டி ‘கோ பேக் ஸ்டாலின்’ என முழக்கமிடுவோம் என்றார். முதலமைச்சர் வந்திறங்கும் விமான நிலையத்திலேயே  கருப்பு பலூன்கள் பறக்கவிடப்படும் என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Election Commission restrictions : நாளை மாலை 6 மணிக்கு பிறகு என்ன செய்யலாம்.? என்ன செய்ய கூடாது.? பட்டியலிட்ட தேர்தல் ஆணையம்
நாளை மாலை 6 மணிக்கு பிறகு என்ன செய்யலாம்.? என்ன செய்ய கூடாது.? பட்டியலிட்ட தேர்தல் ஆணையம்
4 நாட்கள் மதுக்கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...!
4 நாட்கள் மதுக்கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...!
தப்பு தப்பா மொழிபெயர்ப்பு.! செல்வப்பெருந்தகையை கழட்டி விட்டாரா ராகுல்.? அண்ணாமலை பரபரப்பு அறிக்கை
தப்பு தப்பா மொழிபெயர்ப்பு.! செல்வப்பெருந்தகையை கழட்டி விட்டாரா ராகுல்.? அண்ணாமலை பரபரப்பு அறிக்கை
மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அடிக்க பாய்ந்த திமுகவினர்.! கரூரில் பரபரப்பு - நடந்தது என்ன.?
மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அடிக்க பாய்ந்த திமுகவினர்.! கரூரில் பரபரப்பு - நடந்தது என்ன.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Roadshow: போவோமா ஊர்கோலம்? புதுமணத் தம்பதியை ரோடு ஷோ அழைத்துச்சென்ற விஜய்- துள்ளிக்குதித்த மணப்பெண்!
TVK Vijay Roadshow: போவோமா ஊர்கோலம்? புதுமணத் தம்பதியை ரோடு ஷோ அழைத்துச்சென்ற விஜய்- துள்ளிக்குதித்த மணப்பெண்!
IT Raid Selvaperunthagai house : செல்வப்பெருந்தகை வீட்டை சுற்றிவளைத்த வருமான வரித்துறை.! இது தான் காரணம்.? கொந்தளித்த காங்கிரஸ்
செல்வப்பெருந்தகை வீட்டை சுற்றிவளைத்த வருமான வரித்துறை.! இது தான் காரணம்.? கொந்தளித்த காங்கிரஸ்
TN Election Campaign: ஸ்டாலின், இபிஎஸ், விஜய் இன்று எங்கே பரப்புரை? இதுதான் இன்று லிஸ்ட்
TN Election Campaign: ஸ்டாலின், இபிஎஸ், விஜய் இன்று எங்கே பரப்புரை? இதுதான் இன்று லிஸ்ட்
MK Stalin: பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேடிக்கையா இருக்கு.. முதல்வர் ஸ்டாலின் பதில்!
MK Stalin: பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேடிக்கையா இருக்கு.. முதல்வர் ஸ்டாலின் பதில்!
Punjab Kings: பீஸ்ட் மோடில் பஞ்சாப்! எதிரணியை கதிகலங்க வைக்கும் பாண்டிங் - ஸ்ரேயாஸ் காம்போ!
Punjab Kings: பீஸ்ட் மோடில் பஞ்சாப்! எதிரணியை கதிகலங்க வைக்கும் பாண்டிங் - ஸ்ரேயாஸ் காம்போ!
தப்பு தப்பா மொழிபெயர்ப்பு.! செல்வப்பெருந்தகையை கழட்டி விட்டாரா ராகுல்.? அண்ணாமலை பரபரப்பு அறிக்கை
தப்பு தப்பா மொழிபெயர்ப்பு.! செல்வப்பெருந்தகையை கழட்டி விட்டாரா ராகுல்.? அண்ணாமலை பரபரப்பு அறிக்கை
EPS Vs Vijay : ’விஜயின் தாக்கம்’ என்னவாகும் அதிமுக? ஓபனாக பதிலளித்த EPS..!
’விஜயின் தாக்கம்’ என்னவாகும் அதிமுக? ஓபனாக பதிலளித்த EPS..!
நாளை மாலை 7 மணி தான் லாஸ்ட்.! வெளியூர் நபர்கள் ஊரை விட்டு வெளியேறனும்- தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
நாளை மாலை 7 மணி தான் லாஸ்ட்.! வெளியூர் நபர்கள் ஊரை விட்டு வெளியேறனும்- தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
Embed widget