விழுப்புரம் : ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை ஒப்புக்காகவாது திருக்குறள் இருக்கும் அதுவும் இல்லை தமிழ்நாட்டிற்கு எந்த வளர்சியும் இல்லை பல்லாண்டு கோரிக்கையும் இல்லை பதினோரு ஆண்டுகளாக ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கொள்ளாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட நிறைவு 1 லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட பயன்கள் மற்றும் பத்தாயிரம் நபர்களுக்கு நலத்திட்ட வழங்கும் விழா தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில்  தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவி கனேசன் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, செஞ்சி மஸ்தான், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், எம் பி. தரணிவேந்தன், ரவிக்குமார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நலத்திட்ட துவக்க விழாவில் நந்தன் கால்வாய் திட்ட அறிவிப்பிற்கு விவசாயிகள் முதலமைச்சரை சந்தித்து நன்றியை தெரிவித்த்தனர். அதனை தொடர்ந்து மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய அவர், என் கனவு என் எதிர்காலம் என்ற புதிய திட்ட இணையதளத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 254.29 கோடி மதிப்பீட்டில் 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் 390 கோடி மதிப்பீட்டில் 199 முடிவுற்ற திட்டபணிகளை திறந்து வைத்தார்.

நலத்திட்ட விழா மேடையில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்., சோழர்கள் காலத்திலும் பல்லவர் காலத்திலும் வர்த்த நகரமாகவும் புளிக்கு பெயர் பெற்ற திண்டிவனமாக இருந்ததாகவும் மேல்மலையனூர், மயிலம் முருகன் கோவில் செஞ்சி கோட்டை உள்ளிட்ட பல சிறப்புகளை கொண்ட மாவட்டமாக விழுப்புரம் உள்ளது என தெரிவித்தார். 

தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெரும்பாலனவற்றை நிறைவேற்றியும் சொல்லப்படாத திட்டங்களை நிறைவேற்றி தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றி வருவதாகவும்  நூறு நாளில் தீர்வு காணப்படும் என மனுக்கள் பெற்று தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை பெற்று திராவிட மாடல் அரசு நிறுவனப்பட்டதாகவும், மக்களின் குறைகளை தேவைகளை உன்னிப்பாக கவனிச்சி திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருவதாக கூறினார். முதலமைச்சரின் தனி பிரிவு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என மூன்றையும் ஒன்றினைத்து உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் உருவாக்கப்பட்டு 1 கோடியே 49 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும்  உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் இத்திட்டத்தினை செயல்படுத்த கூடாதென உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். ஆனால் நீதிமன்றமே நடத்தலாம் என அறிவித்ததாக தெரிவித்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் ஊரக பகுதிகளில் 45 சேவைகளும் நகர பகுதிகளில் 43 சேவைகள் வழங்கப்பட்டன.

இதில் பெறப்பட்ட 38 லட்சத்து 50 ஆயிரம் மனுக்களில் 38 லட்சத்து 44 ஆயிரம் மனுக்கள் இறுதி செய்யப்பட்டன. இந்த முகாம்களில் சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம், சொத்து வரி பெயர் மாற்றம் மின் இனைப்பு பெயர் மாற்றம், பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகல் வந்தன. அரசு என்பது மக்களுக்கானது அரசு சேவை மக்களுக்கு சென்றடைய வேண்டும் என பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காணப்பட்டன. 

திராவிட மாடல் அரசின் வரல்லாற்றில் முதன்மையான திட்டமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளது. 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரம் மகளிர் பயனடைந்துள்ளனர். மேலும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 சகோதரிகளுக்கு கூடுதலாக இரண்டு மாதத்தில் மனு வாங்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.  தேவையற்ற தாமதங்கள் இன்றி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

தமிழக மக்களின் தேவைகள் அறிந்து புதியதாக 1 லட்சத்து 82 ஆயிரத்து 982 பேருக்கு சமூக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.  35 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு தமிழக அரசு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டுகிறது. 

ஒவ்வொருவரின் தேவைகளை கேட்டு தமிழ்நாட்டினை வடிவமைக்க கூடிய திட்டமாக உங்க கனவு திட்டத்தினை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் கனவுகளை வீட்டிற்கே வந்து கேட்க 50 ஆயிரம் தன்னார்வலர்கள் உள்ளனர். இளைய தலைமுறையின் எண்னங்களை கனவுகளை சேகரிக்க என் 

கனவு என் எதிர்காலம் திட்டத்தின் இணையதளத்தினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் அனைவரும் சமூகம் முன்னேறம் அவர்கள் வாழும் பகுதி முன்னேற தமிழகம் முன்னேற கனவுகளை என் கனவு என் எதிர்காலம் என்ற இணையத்தில் இளைய தலைமுறை பதிவுசெய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு வளர்ச்சிக்காக திட்டமிட்டு வந்தால் ஒன்றிய அரசும் அவர்களின் கூட்டளிகளுக் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க அனைத்து செயல்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அதற்கு உதாரணம் தான் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை பட்ஜெட்டில் ஒப்புக்காகவாது திருக்குறள் இருக்கும் அதுவும் இல்லை ஒப்பிற்கு கூட தமிழ்நாட்டிற்கு எந்த வளர்சியும் இல்லை பல்லாண்டு கோரிக்கையும் இல்லை தேர்தல் வரக்கூடிய மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது பாஜகவின் பட்ஜெட் இருக்கும் வழக்கமாக போன்ற ஸ்டண்ட கூட அவர்கள் தமிழகத்திற்கு செய்யவில்லை 

 

தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு வெறுப்பு உள்ளது இந்தியாவின் வளர்சிக்காக கடுமையாக தமிழகம் உழைக்கிறது ஒன்றிய அரசுக்கு வரிவருவாயை வாரி வழங்குற தமிழகத்திற்கு சொர்ப்ப அளவிலையே வரி வருவாயை கொடுக்கிறார்கள், பதினோரு ஆண்டுகளாக சிறப்பு திட்டங்களை அறிவிக்காமல் வஞ்சிக்கிறார்கள் தேர்தல் முடிவு முன்கூட்டியே தெரிந்து எப்படியும் தோற்கதானே போகிறோம் என நினைத்து இவர்களுக்கு நிதி எதற்கு இவர்களுக்கு ஒதுக்கலாம் என ஒன்றிய அரசு நினைத்திருக்கலாம் அடுத்து 2.0 திராவிட மாடல் அரசு அமையும் தன்மானமிக்க தமிழகத்தை தருவோம் என ஸ்டாலின் தெரிவித்தார்.