இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விபத்தில் பொய்யான தவறுகளை பரப்பி வரும் பாகிஸ்தான் சார்ந்த இரண்டு think tank-ஐ(என்ஜிஓ.,க்கள்) விசாரிக்க தமிழ்நாடு சிபி- சிஐடி விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது.
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தின் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள வெலிங்டன் பாதுகாப்பு சேவை பயிற்சி கல்லூரியில் பயிற்றுநர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்கும் உரையாற்ற வந்த போது இந்த துயரசம்பவம் நடைபெற்றது. ஜெனரல் பிபின் ராவத், துணைவியார் மதுலிகா ராவத் மற்றும் உடன் பயணித்த 11 படை வீரர்களும் உயிரிழந்ததனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண்சிங் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கோர சம்பவம் ஏற்படுத்திய வடுக்களை மறக்க முடியாமல் உயிரிழந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லாடி வருகின்றனர். இதுஒருபுறமிருக்க, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவின் சதிச் செயல் இருக்கும் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சில மூத்த பத்த்ரிகையாளர்கள் சுமத்தத் தொடங்கினர். இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு தமிழகத்தில் செயல் பட்டு வரும் சில தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தமிழ்நாடு பிரிவிணைவாதிகளின் கூடாரமாகி விட்டதாகவும் சில விஷமத்தனமான கருத்துகள் பரப்பட்டன. மேலும், வடநாட்டில் செயல்பட்டு வரும் சில ஊடகங்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் உள்ளடக்கிய அகண்ட பாரதம்- சாத்தியாமா? என்ற தோனியில் விவாதத்தை எழுப்பியது.
இதே போன்ற, ஆதாரமற்ற, விஷத்தனமான கருத்துகளை பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஊடகங்களும், அமைப்புகளும் பரப்பி வருகின்றன. Pakistan Strategic Forum என்ற thinktank அமைப்பு ஹெலிகாப்டர் விபத்தை ரபேல் விமான ஒப்பந்தத்துடன் முடுச்சு போட்டுள்ளது. அதாவது, இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரபேல் விமானங்களை வாங்க பிபின் ராவத் விரும்பியதாகவும், ரபேல் விமான ஒப்பந்தங்களில் உள்ள முறைகேடுகளை மறைக்கவே ராவத் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், காட்டேரி மலை பகுதியில் தாழ்வாக பறந்துகொண்டிருந்த வீடியோவை குறிப்பிட்டு, இந்த நிச்சயாக உள்விவகார பிரச்சனை தான் (insider job) என்றும் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்