தொடர் விடுமுறை - சிறப்பு ரயில் இயக்கம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு பள்ளி விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடவும், சுற்றுலா செல்லவும் மக்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து வெளியூர் செல்லும் பயணிகள் அவதி அடைந்து வரும் நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து ரயில்களில் பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே மற்றும் தென் மேற்கு ரயில்வே இணைந்து சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. 

Continues below advertisement

மங்களூரு – சென்னை – மங்களூரு சிறப்பு ரயில்கள்:

மங்களூரு ஜங்ஷன் – டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் இடையே 06126/06125 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.  டிசம்பர் 23 மற்றும் 30 தேதிகளில் மங்களூருவிலிருந்து புறப்படும் இந்த ரயில் அதே நாளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது. மறுமார்க்கத்தில் டிசம்பர் 24 மற்றும் 31 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில்களில் ஏசி 2-டையர், ஏசி 3-டையர், ஸ்லீப்பர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு – நாகர்கோவில் – ஈரோடு சிறப்பு ரயில்கள்:

ஈரோடு – நாகர்கோவில் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் (ரயில் எண் 06125/06126) டிசம்பர் 23 மற்றும் 30 தேதிகளில் ஈரோட்டிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் நாகர்கோவிலை வந்தடையும். மறுமார்க்கத்தில் டிசம்பர் 24 மற்றும் 31 தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில்களில் ஏசி சேர் கார், சேர் கார், பொதுப் பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

செகந்தராபாத் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள்:

 செகந்தராபாத் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (ரயில் எண் 07407/07408)  கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு இயக்கப்படுகிறது. டிசம்பர் 23 அன்று செகந்தராபாத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் வேளாங்கண்ணியை வந்தடைகிறது.மறுமார்க்கத்தில் டிசம்பர் 25 அன்று மீண்டும் செகந்தராபாத்திற்கு இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் ஏசி 3-டையர், பொதுப் பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.வி.டி பெங்களூரு – கொள்ளம் சிறப்பு ரயில்கள்:

தென் மேற்கு ரயில்வே சார்பில் எஸ்.எம்.வி.டி பெங்களூரு – கொள்ளம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் (ரயில் எண் 06573/06574) இயக்கப்படவுள்ளது.  டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் இயக்கப்படும் இந்த ரயில்கள் பெங்களூரு, சேலம், ஈரோடு, பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் முழுமையாக ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களுக்கும் முன்பதிவு தெற்கு ரயில்வே தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  வெளியூர் செல்லும் திறக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு ரயில்வே சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.