பொங்கல் கொண்டாட்டம்- சிறப்பு ரயில்
பொங்கல்பண்டிகையைகொண்டாடமக்கள்தயாராகிவருகிறார்கள். அந்தவகையில்தொடர்ந்து 5 நாட்கள்விடுமுறைவருவதால்சொந்தஊரில், உறவினர்கள், நண்பர்களோடுகொண்டாடசெல்லதொடங்கியுள்ளனர். அந்தவகையிலசென்னையில்இருந்துஇயக்கப்பட்டசிறப்புபேருந்துகள்மூலம்நேற்றுநள்ளிரவுவரை 5 லட்சத்திற்கும்மேற்பட்டவர்கள்பயணம்செய்துள்ளனர். இதேபோலசிறப்புரயில்ஆம்னிபேருந்துகள், சொந்தவாகனங்கள்மூலமாகவும்பலலட்சம்சென்னையைகாலிசெய்துவிட்டுபுறப்பட்டுள்ளனர். இந்தநிலையில்தென்மாவட்டங்களுக்குகுறிப்பாகமதுரை, நெல்லை, தென்காசிஆகியஊர்களுக்குசெல்லகடைசிநேரசிறப்புரயிலைதெற்குரயில்வேஅறிவித்துள்ளது.
திருச்சி, மதுரை, நெல்லைக்கு சிறப்பு ரயில்
இதுதொடர்பாகவெளியிடப்பட்டுள்ளஅறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு நடவடிக்கையாக சென்னை எழும்பூர் –தென்காசிஇடையேஒருவழிஎக்ஸ்பிரஸ்சிறப்புரயிலைஇயக்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, (ரயில்எண் 06072) சென்னைஎழும்பூர்–தென்காசி ஒருவழி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், ஜனவரி 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்எனவும், மறுநாள் ஜனவரி 14ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு தென்காசியை சென்றடையும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாகவும், இதில் 8 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்கானபெட்டிகள்இடம்பெறும்எனகூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகதெற்குரயிவ்கூறியுள்ளது.
எந்த வழித்தடத்தில் ரயில் செல்லும்
இந்தசிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்எனவும் தென் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த சேவையை பெரிதும் பயன்படுத்தும் வகையில் நேர அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதாககூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
