கரூரில் ரத்த உறையாமை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் ஆவணச் சான்றிதழை ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார். கரூர் மாவட்டம், பழைய அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் ஹிமோபீலியா (இரத்தம் உறையாமை நோய்) பாதிக்கப்பட்டவர்களுக்காக நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆவணச்சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், இந்த சிறப்பு முகாமானது ஹிமோபீலியா (இரத்தம் உறையாமை நோய்) நோயினால் பாதிக்கப்பட்டவர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்த முகாம் இன்று நடைபெறுகிறது. ஹிமோபீலியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் மாவட்டத்தில் 48 நபர்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு பரிசோதிக்கப்பட்டு 40 சதவீதம் குறைபாடுகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆவணச்சான்றிதழ்கள் வழங்கப்படும். அதனடிப்படையில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை இன்றைய தினமே வழங்கப்படும். அந்த அட்டை கிடைத்தவுடன் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (UDI ) 2 வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கிடைத்தவுடன் அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், மருத்துவர்களின் அறிவுரையின்படி குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டு குழந்தைகள் உடல்நலத்தை பேணிக்காத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
தாட்கோ சார்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நபர்களுக்கு வங்கி கடன் பெற பயணிகள் நேர்காணல்.
தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நபர்களுக்கு பொருளாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் வங்கி கடன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் தலைமையில் பயனாளிகள் நேர்காணல் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நபர்களுக்கு பொருளாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ் கீழே குறிப்பிட்டுள்ள தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் வங்கி கடன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் தலைமையில் பயனாளிகள் நேர்காணல் நடைபெற்றது.