மேலும் அறிய

Special bus weekend holidays : விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?

Special bus weekend holidays : விடுமுறைக்கு வெளியூர் செல்ல பொதுமக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்கு வெளியூர் பயணம்

விடுமுறை என்றாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில், வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் என மலைப்பகுதிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதே போல குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் தென்காசி மாவட்டத்தை மக்கள் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிகையில், 12/06/2026 (வெள்ளிக்கிழமை) 13/06/2026(சனிக்கிழமை) மற்றும் 14/06/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம்- சிறப்பு பேருந்து

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 12/06/2026 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 13/06/2026 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12/06/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 295 பேருந்துகளும்.

எத்தனை சிறப்பு பேருந்துகள்

13/06/2026 (சனிக்கிழமை) 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதே போல பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 12/06/2026 மற்றும் 13/06/2026 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

முன் பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7446 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3161 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7379 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
TTV vs Vijay : திமுக ஆட்சியில் ரூ.758 கோடி... தவெக ஆட்சியில் ரூ.1038 கோடி ஆனது எப்படி? - விஜய்யிடம் கணக்கு கேட்கும் டிடிவி
திமுக ஆட்சியில் ரூ.758 கோடி... தவெக ஆட்சியில் ரூ.1038 கோடி ஆனது எப்படி? - விஜய்யிடம் கணக்கு கேட்கும் டிடிவி
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget