விடுமுறை - போக்குவரது துறை சூப்பர் அறிவிப்பு

விடுமுறை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடுவார்கள். இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடுமுறை தான் சற்று ஓய்வெடுக்கும் நாட்களாக உள்ளது. அதிலும் 2 அல்லது அதற்கு மேல் தொடர் விடுமுறை என்றால் உறவினர்கள் வீட்டிற்கோ, சுற்றுலாவிற்கோ சென்று விடுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் வார இறுதி நாள் விடுமுறையையொட்டி வெளியூர்களுக்கு பலரும் திட்டம் போட்டுள்ளனர். எனவே சனி மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்து தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

Continues below advertisement

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து

நாளை 19/12/2025 (வெள்ளிகிழமை), நாளை மறுதினம் 20/12/2025 (சனிக்கிழமை) மற்றும் 21/12/2025 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. எனவே ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு நாளை (19/12/2025 மற்றும் 20/12/2025) நாளை நாளை மறுதினம் மொத்தம் 55 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம், கோயம்பேடு சிறப்பு பேருந்து

மேலும் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 19/12/2025 (வெள்ளிகிழமை) அன்று 240 பேருந்துகளும், 20/12/2025 (சனிக்கிழமை) 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் மாதவரத்திலிருந்து 19/12/2025 மற்றும் 20/12/2025 ஆகிய தேதிகளில் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

முன்பதிவு செய்து பயணியுங்கள்

தற்போது வரை இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,708 பயணிகளும், சனிக்கிழமை 6,292 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,052 பயணிகளும் வெளியூர்களுக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். எனவே வெளியூர் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ளஇருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.