அரசு கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நஞ்சை காளகுறிச்சியில் நடைபெற்றது.




கரூர் மாவட்டம் நஞ்சை காளக்குறிச்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் 1,044 கால்நடைகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். சிறந்த கலப்பின கிடேரி கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே எலவனூர் அரசு கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நஞ்சை காளகுறிச்சியில் நடைபெற்றது.




 


முகாமில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள் வழங்குவது குறித்து கால்நடை மருத்துவர்கள் விவசாயிகளிடம் கூறினார். முகாமில் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் பேசுகையில், பெரும்பாலும் கால்நடை வளர்ப்பதையே இப்பகுதி விவசாய தொழிலாக செய்து வருகின்றனர் ஈ, கொசு போன்ற கடிக்கும் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோய்களுக்கு பாதிக்கப்பட்ட மாடுகளின் காய்ச்சல் உடல் முழுவதும் சிறிய கட்டிகள் கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும் நோய் பரவும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.




எனவே நோய் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த முகாமில் வெள்ளாடு 292, செம்மறி  ஆடுகள் 213 க்கு குடல் புழு நீக்கவும், மாடுகள் 247, எருமைகள் 34, கோழி 258 என மொத்தம் 1044 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமிற்கு ஏலவனூர் கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேந்திரன், பால் உற்பத்தியாளர் நிர்வாகி காளியப்பன், விவசாயிகள் சங்க முக்கிய நிர்வாகி பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு கால்நடை பராமரிப்பு துறை உதவி ஒன்றிய கவுன்சிலர் நல்லசாமி கலந்துகொண்டு முகாமில் தொடங்கி வைத்து  முகாமில் சிறந்த கலப்பின கிடேரி கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட தெரிவித்தனர்.




கரூரில் பல்வேறு குறைபாடு உடைய குழந்தைகள் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் கல்வி சுற்றுலா நடைபெற்றது.


கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காது கேளாத மற்றும் அறிவு சார்ந்த குறைபாடு உடைய குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட பல்வேறு குறைபாடு உடைய குழந்தைகள்  அரசு பேருந்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவனை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு உள்ள இயற்கை அழகை ரசித்து மகிழவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பார்க்கில் பல்வேறு விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி அவர்கள் விளையாடுவதற்கும், மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மீன் பூங்காவை பார்வையிடுவதற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். குறைபாடு உடைய அந்த குழந்தைகள் ஆட்சியருக்கு கை அசைவில் தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் குழந்தைகளின் பாதுகாவலர்கள் உடன் சென்றனர்.