கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் பொய் செய்திகளை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ”கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக 32 வகையான யூடியூப் பக்கங்கள், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. பொய் செய்திகளை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்கள் மூலம்தான் வதந்திகள், போலியான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது” என தெரிவித்துள்ளார். 






நடந்தது என்ன ? 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி (வயது 17). பள்ளி விடுதியில் தங்கி படித்த இந்த மாணவி, கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் மூலமாக , மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர்.


மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண