சென்னை : இளைஞர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்துங்கள் தவறில்லை;ஆனால் சமூக வலைதளம் உங்களை பயன்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே நீரின் முக்கியத்துவத்தையும், மழை நீர் சேகரிப்பின் அவசியத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி அறிவுரை.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள P.N.D.ஆதர்ஷ்கல்வி நிலையத்தின் 72 ஆம் ஆண்டு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி மேடைப்பேச்சு:
தான் படித்த பள்ளியில் இன்று தானே சிறப்பு விருந்தினராக பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் இன்றைக்கு சௌமியா அன்புமணி ஆகிய நான் இந்த நிலைக்கு உயர்ந்த நிற்பதற்கு நான் படித்த என்னுடைய பள்ளியும் எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் தான் காரணம் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பள்ளி மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
இயற்கை நமக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம் தண்ணீர் அந்த தண்ணீரை மாசு படுத்தாமலும்,அளவோடும் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். பாலாறு, தென்பெண்ணை ஆறு,நொய்யல் ஆறு, தாமிரபரணி காவேரி இன்று தமிழ்நாட்டில் எத்தனையோ பல நல்ல ஆறுகள் இருக்கின்றன ஆனால் அந்த ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு மாசடைந்து இருக்கின்றன. இந்த ஆறுகளையும் நதிகளையும் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
வள்ளுவர் கோட்டம், சென்னை விமான நிலையம் என்று சென்னையில் உள்ள பெரும்பாலான முக்கிய கட்டிடங்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் அதைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். 2015ல் ஏற்பட்ட பெருவெள்ளம் போல மீண்டும் ஒரு வெல்லம் ஏற்படக்கூடாது என்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மழைக்காலத்தில் அதிகமாக பெய்யும் மழை நீரை உறிந்து வைத்துக்கொண்டு நிலத்தடி நீருக்கு தேவையான தண்ணீரை கொடுக்கும்.
மனிதர்களுக்காக மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பறவைகளும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகின்றன ஏராளமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன அவற்றை பாதுகாக்க வேண்டிய அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் 350 க்கும் மேற்பட்ட வாழைப்பழ வகைகள் உள்ளன பலவிதமான கொய்யா, கத்தரிக்காய் போன்ற காய்கறி, பழங்கள் தமிழ்நாட்டில் விளைகின்றன அவற்றுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டில் பல வகையான நாட்டு நாய்கள், நாட்டு மாடு வகைகள் இருக்கின்றன.அவை அழிந்து வருகின்றன இவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் பாதுகாக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதை படிக்க வைக்க உங்களது பெற்றோர் தயாராக இருக்கிறார்கள் எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக படித்து நீங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குங்கள்.
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக பொறுப்புடன் பயன்படுத்துங்கள். உங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யாதீர்கள் எது தேவையோ அதை மட்டும் பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அதை குடும்பத்தாரிடம் ஆசிரியர்களிடம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சமூக வலைதளங்களை நல்ல செயல்களுக்காக மட்டும் பயன்படுத்துங்கள் தவறான செயல்களுக்காக எந்த வழியிலும் பயன்படுத்தாதீர்கள். சோசியல் மீடியாவை நீங்கள் உபயோகப்படுத்துங்கள், ஆனால் சோசியல் மீடியா உங்களை உபயோகப்படுத்த அனுமதிக்காதீர்கள்.
