மேல்மருவத்தூர் கோயிலில் குவியும் பக்தர்கள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெண்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் கோயிலாக இந்த கோயில் உள்ளது. பெரும்பலான கோயில்களில் பெண்கள் கருவறைக்குள் நுழைய முடியாது அல்லது வழக்கமான கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் இங்கு பெண்கள்  மூலவர் கருவறைக்குள் சென்று நேரடியாக வழிபடலாம். பெண்கள் தானே விக்ரகங்களுக்கு பூஜைகள் செய்யலாம். இந்த கோயிலில் தைப்பூசம், யுகாதி, தமிழ் புத்தாண்டு, சித்திரை பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, மார்ச் 3 அடிகளாரின் பிறந்தநாள் ஆகியவை முக்கிய விழாக்காலமாக உள்ளது. இங்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகிறார்கள்.
 

இருமுடி, தைப்பூசம் திருவிழா

இந்த நிலையில்,இருமுடி மற்றும் தைப்பூசம் திருவிழாவையொட்டி பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருவார்கள். எனவே இந்த பக்தர்களுக்கு உதவிடும் வகையில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற டிசம்பர் 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருமுடி மற்றும் தைப்பூசம் திருவிழாவையொட்டி மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லவுள்ளது.
 

மேல்மருவத்தூரில் நின்று செல்லும் ரயில்கள்

 
11017 லோக்‌மான்ய திலக் டெர்மினஸ் – காரைக்கால் எக்ஸ்பிரஸ்
 
11018 காரைக்கால் – லோக்‌மான்ய திலக் எக்ஸ்பிரஸ்
 
12635 சென்னை எக்மோர் – மதுரை வைகை எக்ஸ்பிரஸ்
 
12636 மதுரை – சென்னை எக்மோர் வைகை எக்ஸ்பிரஸ்
 
12637 சென்னை எக்மோர் – மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ்
 
12638 மதுரை – சென்னை எக்மோர் பாண்டியன் எக்ஸ்பிரஸ்
 
12641 கன்னியாகுமரி – ஹஸ்ரத் நிஜாமுத்தீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ்
 
12642 ஹஸ்ரத் நிஜாமுத்தீன் – கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ்
 
12651 மதுரை – ஹஸ்ரத் நிஜாமுத்தீன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்
 
12652 ஹஸ்ரத் நிஜாமுத்தீன் – மதுரை சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்
 
12653 சென்னை எக்மோர் – திருச்சிராப்பள்ளி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
 
12654 திருச்சிராப்பள்ளி – சென்னை எக்மோர் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
 
12661 சென்னை எக்மோர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்
 
12662 செங்கோட்டை – சென்னை எக்மோர் பொதிகை எக்ஸ்பிரஸ்
 
12667 சென்னை எக்மோர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
 
12668 நாகர்கோவில் – சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ்
 
16101 சென்னை எக்மோர் – கொல்லம் எக்ஸ்பிரஸ்
 
16102 கொல்லம் – சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ்
 
16103 தாம்பரம் – இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
 
16104 இராமேஸ்வரம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ்
 
இந்த ரயில்கள் உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் 57 ரயில்களும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.