ரயில் பயணிகளுக்கு சூப்பர் திட்டம்

பேருந்து, கார் என சொகுசாக பயணம் செய்தாலும் ரயிலில் பயணம் செய்வது போன்ற வசதி இருக்காது. அடிப்படை வசதிகளோடு பாதுகாப்பும் உள்ளதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கவே விரும்புவார்கள். அந்த வகையில் தினந்தோறும் பல கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே ரயில் பயணிகளுக்கு வசதிகளை அதிகரித்து கொடுக்கும் வகையில் புதிய, புதிய திட்டங்களையும் ரயில்வே நிர்வாகமும் செயல்படுத்தப்படுகிறது.

Continues below advertisement

அந்த வகையில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பெட் ஷீட் மற்றும் தலையணை வழங்கப்பட்டு வரும் நிலையில், வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் தூங்கும் வசதி கொண்ட ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டியில் முன்பதிவு செய்து பயணிக்கும் பெட் ஷீட் மற்றும் தலையணை வழங்கப்படவுள்ளது.

ஸ்லீப்பர் வசதி பெட்டி பயணிகளுக்கு புதிய திட்டம்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தூங்கும் வகை (Sleeper Class) பயணிகளுக்கான வசதி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய முன்னோடியான சேவையை அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேவில் முதல் முறையாக நன்கு சுத்தம் செய்யப்பட்ட படுக்கைப் பொருட்களான பெட்ஷீட் மற்றும் தலையணை வழங்கப்படவுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது. இந்த சேவையானது ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

AC வசதி இல்லாத ஸ்லீப்பர் பயணிகள், தங்களது பயணத்தின் போது தேவைப்பட்டால் கட்டண அடிப்படையில் சுத்தமான படுக்கைப் பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சேவையின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

• ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு வசதியை மேம்படுத்தவும்• மலிவான கட்டணத்தில் உடனடி சேவை• பயண அனுபவம் மேம்பாடு• ரயில்வேக்கு கூடுதல் வருவாய்

முதல் கட்டமாக, சென்னையில் இருந்து புறப்படும்  10 ரயில்களில், 3 ஆண்டுகளுக்கு இச்சேவை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ₹28,27,653 வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

படுக்கைப் பொருட்களின் கட்டண விவரம்

படுக்கைத் துணி + தலையணை + தலையணை உறை பெறுவதற்கு 50 ரூபாய் கட்டணம்தலையணை +  தலையணை உறை  30 ரூபாய் கட்டணம்பெட் ஷீட் பெறுவதற்கு 20 ரூபாய் கட்டணம்

 

புதிய சேவை வழங்கப்படும் 10 ரயில்கள்

  • நீலகிரி எக்ஸ்பிரஸ்
  • மங்களூர் எக்ஸ்பிரஸ்
  •  மன்னார்குடி எக்ஸ்பிரஸ்
  • திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்
  • பாலக்காடு எக்ஸ்பிரஸ்
  • சிலம்பு எக்ஸ்பிரஸ்
  • தாம்பரம்–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
  • திருவானந்தபுரம் எக்ஸ்பிரஸ்
  • ஆலப்புழாவிற்கு எக்ஸ்பிரஸ்
  • மங்களூர் எக்ஸ்பிரஸ்