மேலும் அறிய

Rameswaram train: ராமேஸ்வரம் ரயில் இனி சென்னை எக்மோருக்கு செல்லாது.! எங்கே வரை இயக்கப்படும்.? வெளியான லேட்டஸ்ட் அறிவிப்பு

Rameswaram train: ராமேஸ்வரத்திற்கு தினமும் பல ஆயிரம் பயணிகள் சென்று வரும் நிலையில், ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்

நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் பெரிதும் விரும்புவது ரயில் பயணத்தை மட்டுமே அந்த வகையில், குறைவான கட்டணத்தில் பாதுகாப்போடு அனைத்து வசதிகளும் இருப்பதால் ரயில்களில் தினந்தோறும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்கு ஏற்ப நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது. இருந்த போதும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு ஒரு மணி நேரத்தில் முடிவடைந்து விடுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருப்பது ராமேஸ்வரம். இங்கு ராமநாதசுவாமி கோயில், அக்னி தீர்த்த கடற்கரை, தனுஷ்கோடி, பாம்பன் பாலம், முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்டவற்றை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்

எனவே சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணியானது கடந்த ஜூலை மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் 10க்கும் மேற்பட்ட ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் படி பல ரயில்கள் இயக்கப்பட்டும் வந்தது. இதன் படி ராமேஸ்வரத்திற்கு செல்லும் இரண்டு ரயில்களும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டது.

தாம்பரத்தில் இருந்து ரயில்கள் இயக்கம்

இதில் சேது விரைவு ரயில் மட்டும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த மாதம் முதல் மீண்டும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த ரயிலும் வருகிற 20ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சேவை துவங்கி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்

  •  சேது விரைவு ரயில் (ரயில் எண் 22662) – (இராமேஸ்வரம் – சென்னை எழும்பூர்) 19 பிப்ரவரி 2026 முதல் 05 ஏப்ரல் 2026 வரை சென்னை எழும்பூர் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படும். தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை  06.35 மணிக்கு வந்தடையும். 
  • சேது விரைவு ரயில் (ரயில் எண் 22661) - (சென்னை எழும்பூர் – இராமேஸ்வரம்) பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 06.25 மணிக்கு புறப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பயணிகள் இதனை கருத்தில் கொண்டு தங்களின் பயண திட்டங்களை முன்னதாக ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் விழா மீண்டும் துவக்கம்!
46 ஆண்டுகளுக்குப் பிறகு: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் விழா மீண்டும் துவக்கம்!
காஞ்சிபுரத்தில் ஹைடெக் நியாய விலை கடை: நவீன வசதிகளுடன் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்திய எம்.எல்.ஏ!
காஞ்சிபுரத்தில் ஹைடெக் நியாய விலை கடை: நவீன வசதிகளுடன் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்திய எம்.எல்.ஏ!
ADMK alliance Vs MK STALIN : யாருக்கு யார் தலைமை என தெரியாமல் ஒரு கூட்டணி.? அதிமுக, பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
யாருக்கு யார் தலைமை என தெரியாமல் ஒரு கூட்டணி.? அதிமுக, பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் சேர்ந்து மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026 !
ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் சேர்ந்து மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026 !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Israel Iron Beam: இஸ்ரேல் களமறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
Trump Vs Iran IRGC: “சரணடையலைன்னா சாவுதான்“; எச்சரித்த ட்ரம்ப்; இறங்கி அடிக்க தயாராகும் ஈரான்.? என்ன நடக்கும்.?
“சரணடையலைன்னா சாவுதான்“; எச்சரித்த ட்ரம்ப்; இறங்கி அடிக்க தயாராகும் ஈரான்.? என்ன நடக்கும்.?
DMK CONGRESS Alliance: 25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
Iran Prez. Masoud Pledge: “தவறு செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி“; சூளுரைத்த ஈரான் அதிபர்; போர் ஓயாது போல இருக்கே.!
“தவறு செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி“; சூளுரைத்த ஈரான் அதிபர்; போர் ஓயாது போல இருக்கே.!
Embed widget