Slender loris: இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைய உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் முதல் கடல்பசு பாதுகாப்பகத்தை தொடர்ந்து தற்போது தமிழக அரசு தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்க முன்வந்து உள்ளது. கடவூர் தேவாங்கு சரணாலயம்: கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் ஏழு பிளாக்குகளில்) பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைய உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சூற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இன்று புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலை பெற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரை கூட்டத்தொடரில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.






தேவாங்கை பாதுகாக்க நடவடிக்கை


அழிந்து வரும் இந்த தேவாங்குகள் இனத்தை பாதுகாக்க தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,86.56 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள் தேவாங்குகள் வாழ்விடகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த அவசியத்தை புரிந்த தமிழ்நாடு அரசு இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயத்தை கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்க உறுதிபூண்டுள்ளது. மேலும் அழிவின் விளம்பில் இருக்கும் உயிர்களுக்கு மீண்டும் உயிர்ப்பைக் கொடுத்திருக்கிறது.


தேவாங்குகள் சிறிய இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தை சார்ந்தது. இவைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மரங்களிலேயே கழிக்கின்றன. இவைகள் விவசாய பயிர்களுக்கு சேதத்தை உண்டாகும் மற்றும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மைய உண்டாக்குகின்றன. மேலும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், தேவாங்கு இனத்தை அழிந்து வரும் பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்கள் வாழும் இடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுதல்களை தணித்தல் மூலமே தேவாங்குகளின் பெருக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.