தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் -2027 பொதுமக்கள் தங்களது. சுயவிபரங்களை (SELF ENUMERATION), என்ற https://se.census.gov.in/ இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.
சுயவிபரங்களை பதிவேற்றம் செய்ய ஏதுவாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் -2027 நடைபெறவுள்ளது. மேற்படி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் செய்யலாம். பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சுயவிபரங்களை (SELF ENUMERATION) பதிவேற்றம் செய்யலாம். சுயவிபரங்களை பதிவேற்றம் செய்ய ஏதுவாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://se.census.gov.in/ வாயிலாகவும் மற்றும் கியூஆர் கோடு மூலமாகவும், சுயவிபரங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
சுயவிபரங்களைப் பதிவேற்றம்
சுயவிபரங்களைப் பதிவேற்றம் செய்யும் காலம் 17.07.2026 முதல் 31.07.2026 வரை 15 நாட்களுக்கு மட்டுமே பதிவு செய்யலாம். எனவே, நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது சுயவிபரங்களை பதிவு செய்திட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு - Census 2027
இந்திய நாட்டின் 16- ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026–2027 காலகட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இது டிஜிட்டல் முறையில் நடைபெறும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
* முக்கிய அம்சங்கள் -
1. முதலாம் கட்டம்: வீடுகள் மற்றும் குடியிருப்பு விவரங்கள் (House Listing & Housing Census).
2. இரண்டாம் கட்டம்: குடும்ப உறுப்பினர்கள், வயது, பாலினம், கல்வி, தொழில், மதம், சாதி விவரங்கள் உள்ளிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு.
புதுமைகள்:
முதல் முறையாக டிஜிட்டல் கணக்கெடுப்பு. பொதுமக்கள் Self-Enumeration (சுயமாக இணையத்தில் விவரங்களை பதிவு செய்தல்) வசதி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாதி கணக்கெடுப்பும் இதில் இடம்பெறுகிறது. இந்த கணக்கெடுப்பின் தகவல்கள் அரசு திட்டங்கள், நலத்திட்டங்கள், வள ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற முக்கிய நிர்வாக முடிவுகளுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படும்.
