திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 739 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபட்ட நிலையில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வீதம் மொத்தம் 1202 வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 739 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரிமான சிவசௌந்தரவல்லி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது தேசிய, மாநில கட்சிகளை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், திமுக சார்பில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உட்பட பலர் பெற்றுக் கொண்டனர்.
இந்த பட்டியலில் மாவட்ட முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 34712, கண்டறியப்படாத முகவரியில் இல்லாதவர்கள் 29621, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர் 43067, இரட்டை பதிவு 9339 ஆக மொத்தம் 1,16,739 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.