ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதில், தகுதியற்ற நபர்களும் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனையடுத்து தகுதியற்ற பயனாளிகளை நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Continues below advertisement

இலவச உணவு தானியம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 'பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மாதம் தலா 5 இலவச உணவு தானியமும், 'அந்தியோதயா அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ இலவச உணவு தானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் சுமார் 81.35 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

Continues below advertisement

தமிழ்நாட்டின் நிலை என்ன?

இந்நிலையில் இலவச உணவு தானியங்கள் உண்மையான ஏழைகளுக்குத்தான் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய மத்திய உணவு அமைச்சகம் நாடு முழுவதும் கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் விரிவான கள ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. அதாவது நாடு முழுவதும் 13.2 சதவீதம் பேர் தகுதியற்றவர்களாக இருந்தும் இலவச ரேஷன் சலுகைகளை பெற்று வருவது தெரியவந்துள்ளது. இதில்  மேற்கு வங்கத்தில் 39.5 சதவீதத்துடன் முதலிடத்திலும், திரிபுரா 39.2 சதவீதத்துடன் 2வது இடத்திலும், தமிழ்நாடு 38.7 சதவீதத்துடன் 3வது இடத்திலும் உள்ளது. கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் தகுதியற்ற பயனாளிகளின் விகிதம் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் 12.5 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 15.6 சதவீதமாக பயனாளிகள் உள்ளனர்.

அம்பலமான உண்மைகள்

விதிமுறைகளுக்கு மாறாக, பொருளாதார வசதி கொண்ட பலரும் இலவச ரேஷன் பொருட்களை பெறுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சொந்த கார் வைத்திருப்பவர்கள், ஏசி வசதி கொண்ட வீடுகளில் வசிப்பவர்கள், 3 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட கான்கிரீட் வீடுகளை வைத்திருப்பவர்கள் மற்றும் குடும்பத்தில் அரசு ஊழியர்கள் உள்ளவர்கள் என பலரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!

மத்திய அரசின் அறிவுறுத்தல்

தற்போதைய சூழலுக்கு ஏற்ப வருமான வரித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆவணங்களுடன் ரேஷன் கார்டு தரவுகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் வாயிலாக தகுதியற்ற பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை மாநிலங்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.