கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 5வது மணி நகர் பகுதியில்  கலைஞரின் நகர்புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் கழிவு நீர் வடிகால்கள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 




 


இந்தப் பணிகள் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பணிகள் மிகவும் மந்தமான நிலையிலேயே நடைபெற்று வந்தன. இந்நிலையில் இங்கு கட்டப்பட்டுள்ள கழிவு நீர் வடிகால்களின் பக்கவாட்டு சுவர்கள் தரமற்ற முறையிலும், கம்பிகள் இல்லாமலும் கட்டப்பட்டுள்ளதால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், இடிந்தும் காணப்படுகின்றன. அப்பகுதியில் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகாலின் பக்கவாட்டு சுவர்  தற்போது பெய்த மழையாலும், பக்கவாட்டு சுவர் கம்பிகள் இன்றி  கட்டப்பட்டதால் வடிகால் பக்கவாட்டு சுவர் உடைந்து உடைந்து விழுந்தது.


 


 




கழிவு நீர் பாதை செல்லும் வழியில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்காமல் மின் கம்பங்களுக்கு குறுக்கே கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி  கட்டியுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் கழிவு நீர் வடிகால் பாதை அமைக்கும் போதே ஒப்பந்ததாரிடம் தரமற்ற முறையில் கட்டி விடுவீர்கள் என்று கூறியதற்கு ஒப்பந்ததாரர் பணியினை நிறுத்தி கிடப்பில் போட்டு உள்ளார்.


 




பணிகள் ஆரம்பித்து பத்து மாதங்களுக்கு மேலாகியும் முடிவடையாததால்  தற்போது பெய்து வரும் மழையினால் இப்பகுதி மக்கள்  பெரும் அவதிகுள்ளாகி வருகின்றனர். எனவே தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் பாதையினை மறு சீரமைத்து புதிதாக தரமானதாக கட்டித் தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


 


என்ன செய்ய வேண்டும்?


 


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.