தமிழ்நாட்டில் சீமைக்கருவை மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை அறிவிக்க இரண்டு மாத அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமைக்கருவை மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை அறிவிக்கை தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, இறுதிக் கொள்கை முடிவை அறிவிக்க எட்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியது. சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடந்து வருவதாகவும் தெரிவித்தது. ஆனால், இறுதி கொள்கையை அறிவிக்க அரசுக்கு இரண்டு மாதம் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி தாக்கல் செய்த வழக்குகளை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண