முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தனர்.


 


தமிழக அரசியலில் பெரிதும் பேசப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை பல்வேறு காலகட்டங்களில் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் வருகின்ற ஜூலை மாதம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து ஓராண்டு ஆக உள்ள நிலையில் இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என அவரது ஆதரவாளர்களும்  கரூர்  மாவட்ட திமுக விசுவாசிகளும் புலம்பி வருகின்றனர்.


 




 


இருந்த போதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க பாராளுமன்றத் தேர்தலில் கோவை மற்றும் கரூர் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ததற்கு செந்தில் பாலாஜி அவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்ற நிலையில் தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளும் திமுக வென்று சாதனை படைத்துள்ளது.


 


 


 




இருப்பினும் கடந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் சிறை கைதியாக உள்ளார். இந்நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறி கரூர் மாவட்ட திமுக உடன் பிறப்புகளும், செந்தில் பாலாஜியின் விசுவாசிகளும் உற்சாகத்தில் இருந்த நிலையில் மீண்டும் பாரத பிரதமராக மோடி அவர்களும் இந்தியாவை ஆளும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்துள்ளதால் அவருக்கு இந்த முறை ஜாமீன் கிடைக்குமா என பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 


 




இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலை பெறவும் உடல் நலமுடன் வாழ ஆறாம் மக்கள் கட்சியின் சார்பாக அதன் நிறுவனத் தலைவர் காமராஜ் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் இன்று தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர். 


 


 




இந்த நிகழ்ச்சியில் அரண் மக்கள் கட்சியின் நிறுவனர் காமராஜ் பேசுகையில், தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் பல்வேறு சாதனைகளை புரியவும், கரூர் மாவட்டத்தின் மக்கள் நம்பிக்கையின் பெற்ற மண்ணின் மைந்தன் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விரைவில் வழக்கில் இருந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என கரூர் மாரியம்மன் மனம் உருகி வழிபட்டதாகவும் தெரிவித்தார். மேலும் கிறிஸ்துவ ஆலயத்திலும், தர்காவிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளதாகவும் கரூர் மாவட்டத்தை தொடர்ந்து திருச்சி மற்றும் சென்னையிலும் பல்வேறு இடங்களில் வழிபாட்டு முறைகளில் அறம் மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக கரூர் செய்தியாளிடம் கட்சியின் நிறுவனத் தலைவர் காமராஜ் தெரிவித்தார். இவர் பிரார்த்தனை நிறைவேறுமா அல்லது மீண்டும் வழக்கு விசாரணை தள்ளி போகுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.