நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீஸ் அனுப்பிய சம்மனுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “விஜயலட்சுமிக்கு 8 முறை கருகலைப்பு செய்தேன் என்பது மிகப்பெரிய நகைச்சுவை. வீரலட்சுமி என் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் பதில் அளிக்க வேண்டும். விஜயலட்சுமி, வீரலட்சுமியால் நான் தான் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளேன். என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்த வீரலட்சுமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
திருமணம் செய்துகொள்வதாக நடிகர் விஜயலட்சுமி தன் மீது அளித்த புகாரின் பேரில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். விசாரணை முடிந்து வந்த சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது விஜயலட்சுமி தன்மீது இந்தக் குற்றச்சாட்டை வைக்க அவரைத் தூண்டியது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர்தான் என்று கூறினார். மேலும் “ இதுவரை பல்வேறு சமூகப் போராட்டங்களை முன்னெடுத்ததற்காக என்மீது மொத்தம் 128 வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகள் எதிலும் நான் குற்றவாளி என்று நிரூபிக்க முடியாமல் தற்போது இப்படியான ஒரு முயற்சியை எடுத்துள்ளார்கள். ஒரு போராட்டக்காரனை மக்கள் மத்தியில் சிதைக்க வேண்டும் என்றால் பெண்களை வைத்து இப்படி ஒரு அவதூறு பரப்பினால் போதும்.
”2011 ஆம் வருடம் என்மீது புகாரளிக்கப் பட்டபோது ஏன் இந்த விசாரணையை அப்போது மேற்கொள்ள வில்லை. நான் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொண்டேன் என்று சொல்கிறார்களே. அப்படியென்றால் திருமணத்திற்கு ஒரு ரசீது வழங்கப் பட்டிருக்க வேண்டும் இல்லையா. அதை சான்றாக காட்டச் சொல்லுங்கள். நான் அவர்களை ஏமாற்றியதாக சொல்கிறார்கள் உண்மையைச் சொன்னால் கடந்த 13 ஆண்டுகளாக இந்தப் பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்டு வருகிறேன். இத்தனை கோடி மக்களால் நேசிக்கப்படும் ஒரு மனிதர் சமூகத்தில் முன் அசிங்க்ப்படுவதை நீங்கள் ரசிக்கிறீர்கள்.
என்மீதான குற்றச்ச்சாட்டிற்கு நிரூபனத்தை கேட்டு நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இந்தப் பிரச்சனைகள் தீர்வு காண்பேன். நான் மெளனமாக இருக்கும்போது என் மீது பழி சுமத்துகிறீர்கள். அதனால்தான் இன்று நானே இந்த விசாரணைக்கு முன்வந்திருக்கிறேன். என் முகத்திற்கு நேராக நீதிமன்றத்தில் ஒரு முறை விஜயலட்சுமி அதே குற்றச்சாட்டுகளை பேசட்டும் . உரிய ஆதாரங்களை கொடுங்கள் இல்லையென்றால் அனைவரின் முன்னாள் பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.” என்று அவர் கூறினார். வருகின்ற 20 ஆம் தேதி சீமான் விஜயலட்சுமி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
விஜயலட்சுமி சீமான் விவகாரம்
சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக பிரபல நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் புகாரளித்து பின் அதனை திரும்பப் பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மீண்டும் தனது புகாரை விசாரிக்க கோரி என்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சீமான் மீது தான் அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக கூறினார் விஜயலட்சுமி. இதனைத் தொடர்ந்து தன் சார்பில் இருந்து விளக்கம் தரும் வகையில் தாமாக முன்வந்து இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான்.