புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பம் தாங்காமல் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் பாம்புகள் தஞ்சமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

Continues below advertisement

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், புதுச்சேரி வனத்துறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 5 ‘ஷிப்ட்’ முறைகளில் ஊழியர்களை நியமித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

வெப்பத்தின் தாக்கமும், பொதுமக்களின் அச்சமும்

புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் கொடூரம் மிகக் கடுமையாக உள்ளது. நிலத்தடி வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக, புதர்கள் மற்றும் வளைகளில் வாழும் பாம்புகள் குளுமையான இடங்களைத் தேடி வெளியேறி வருகின்றன.இவ்வாறு வெளியேறும் பாம்புகள், அருகில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், அலுவலகப் பணியாளர்களும், பொதுமக்களும் கடும் அச்சத்திற்கும், பீதிக்கும் உள்ளாகியுள்ளனர். இதுகுறித்த புகார்கள் வனத்துறைக்குத் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

Continues below advertisement

24 மணி நேரமும் சுழற்சி முறை (5 'ஷிப்ட்'கள்)

பொதுமக்களின் அச்சத்தைப் போக்கவும், உடனடியாகப் பாம்புகளைப் பாதுகாப்பாகப் பிடிக்கவும் புதுச்சேரி வனத்துறை ஒரு சிறப்பான திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி, நாள் முழுவதும் (24 மணி நேரமும்) ஊழியர்கள் பணியில் இருக்கும் வகையில் சுழற்சி முறையில் 5 ஷிப்ட்கள் பிரிக்கப்பட்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணி நேர விவரங்கள்:

 முதல் ஷிப்ட்:காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைஇரண்டாவது ஷிப்ட்: மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை

மூன்றாவது ஷிப்ட்: இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை

பொது ஷிப்ட்: காலை 8:45 மணி முதல் மாலை 5:45 மணி வரை

இரவு ஷிப்ட்: மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை

தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள்

பொதுமக்கள் தங்கள் பகுதி குடியிருப்புக்கோ அல்லது அலுவலகத்திற்கோ பாம்பு வந்தால், அச்சப்படாமல் உடனடியாகப் பிடிப்பதற்கு வனத்துறையின் மஸ்தூர் ஊழியர்களைக் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

  • கோபி - 99948 13931
  • சக்திவேல் - 90474 59567
  • வேலாயுதம் - 96005 73080
  • நாகராஜன் - 97867 04949
  • வாழ்முனி - 99445 40256
  • சீனிவாசன் (ஊழியர்களின் பொறுப்பு அதிகாரி) - 93626 64429

ஒரே நாளில் 10 பாம்புகள் மீட்பு

வனத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு காரணமாக, புகார்கள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று ஒரே நாளில் மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் நுழைந்த 10 பாம்புகளை வனத்துறை ஊழியர்கள் லாவகமாகப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்துள்ளனர்.வனத்துறையின் இந்த உடனடிச் செயல்பாடு, புதுச்சேரி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.