விடுமுறை கொண்டாட்டம்


விடுமுறை என்றாலே மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டம் தான், அதிலும் தொடர் விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும். வெளியூர்களுக்கு சுற்றுலா, உறவினர்கள் வீட்டிற்கு பயணம் என புறப்பட்டு விடுவார்கள். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டமான மாதமாக டிசம்பர் மாதம் அமையவுள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட 2025-26 கல்வியாண்டு நாட்காட்டியின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மொத்தம் 210 வேலை நாட்கள் உள்ளன. 

Continues below advertisement


ஏமாற்றம் கொடுத்த நவம்பர் மாதம்


வார இறுதி விடுமுறை நாட்களான சனி,ஞாயிறு, பொது விடுமுறைகள், பண்டிகை விடுமுறைகள், காலாண்டு, அரையாண்டு,கோடை விடுமுறைகள் என பல வகை விடுமுறைகள் உள்ளன. அந்த வகையில் மாணவர்களுக்கு நவம்பர் மாதத்தில் ஏமாற்றமான மாதமாகவே அமைந்தது. வார விடுமுறை நாட்களை தவிர்த்து கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கவில்லை. அதுவும் நவம்பர் மாதம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தில் பெரிய அளவில் விடுமுறை கிடைக்கவில்லை.எனவே மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் ஏமாற்றமான மாதமாகவே நவம்பர் மாதம் இருந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் மாணவர்களுக்கு குஷியான மாதமாக அமையவுள்ளது.


டிசம்பரில் அரையாண்டு தேர்வு


அந்த வகையில் டிசம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 10முதல் 12 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.  அந்த வகையில் டிசம்பர் 15ஆம் பள்ளி மாணவர்களுக்கு தேதி அரையாண்டு தேர்வானது தொடங்கவுள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையடுத்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவுள்ளது. எனவே மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை கிடைக்கவுள்ளது. அதே நேரம் அரசு ஊழியர்களுக்கு வார விடுமுறையை தவிர்த்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக டிசம்பர் 25 ஆம் தேதி மட்டும் அரசு விடுமுறை நாளாக உள்ளது. 


 



டிசம்பரில் கூடுதல் விடுமுறை


மேலும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். எனவே டிசம்பர் மாதம் கூடுதல் விடுமுறைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமில்லாமல் திருவண்ணாமலை தீபம், கோயில் திருவிழாக்கள் என அந்த அந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் கிடைக்கவுள்ளது.