திருவண்ணாமலை  மாவட்டம் மற்றும்  விழுப்புரம் மாவட்டம்  ஆகிய பகுதிகளில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் மற்றும் திருக்கோயிலூர் ஆயக்கட்டு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் உள்ளிட்ட 55 ஆயிரம் ஏக்கர் விவசாய பாசன பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது சாத்தனூர் அணை.


சாத்தனூர் அணை:


தெண்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் முழு நீர் மட்ட உயரம் 119 அடியாகும். அணையின் முழு கொள்ளளவு 7321 மில்லியன் கன அடியாகும். தொடர் கன மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சாத்தனூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


தற்போது சாத்தனூா் அணையின்  நீர்மட்டம் 118.55 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு இன்று காலை நிரவலப்படி 7220 மில்லியன் கன அடியாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் சாத்தனூா் அணையில் இருந்து மாா்ச் முதல் வாரத்தில் விவசாய பாசனத்திற்க்காக இடது மற்றும் வலது புற கால்வாய்களின் வழியே  தண்ணீா் திறந்து விடப்படும். 


 




 


45 ஆயிரம் ஏக்கர்:


அதன்படி விவசாய பாசனத்திற்கு சாத்தனூா் அணையில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இடது மற்றும் வலது புற கால்வாய்களில் இருந்து 570 கன அடி வீதம் தண்ணீரை திறந்து வைத்தார். விவசாய பாசனத்திற்காக தொடந்து 90 நாட்கள் இடது புற கால்வாயில் 350 கன அடி தண்ணீரும் மற்றும் வலது புற கால்வாயில் 220 கன அடி தண்ணீரும்  திறந்து விடப்படும்.


இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டில் உள்ள இடது மற்றும் வலது புற கால்வாயில் இருந்து தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்தார். இதில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு பிச்சாண்டி .மாவட்ட ஆட்சியர் முருகேஷ். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை. மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் .சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி.பெ.சுதி. சரவணன். உதயசூரியன். உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றார். 


 


 




சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு;


விவசாய பாசனத்திற்கு சாத்தனூர் அணை தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை முறையாக பயன்படுத்தி விவசாய பொருட்களை விவசாயிகள் அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டுமென பொதுப்பணித்துறை அமைச்சர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற வகையில் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து தற்போது வரை விவசாயத்திற்காக தனி பட்ஜெட் போடப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக உள்ளதாகவும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பது தண்ணீர் அந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாய பொருட்களை அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.