சென்னை பிரபல தனியார் பள்ளியில் பாலியல் புகார் எழுந்ததை அடுத்து பல்வேறு பள்ளிகளின் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார்களை எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில் தனியார் பல்கலைக்கழகமான தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை. குறித்து அந்த கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் புகார் எழுப்பியுள்ளனர். இதுவரை 900 மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டிருக்கும் அந்தப் புகாரில் பல்கலைக்கழக டீன் வைத்திய சுப்ரமணியம் குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் சாதியவாதியாகவும், பாலின பாகுபாடு காட்டும் நபராகவும் நடந்துகொள்வதாக அந்தமாணவர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
,’நீங்கள் பார்ப்பனராகத்தான் இருக்கவேண்டும்.பிறகு ஏன் உங்கள் மகள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதில்லை?’ எனக் கேட்டார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாணவரின் புகாரில்,’நானும் எனது தந்தையும் எங்களது டீனைப் பார்க்கச்சென்றோம். அவர்,’நீங்கள் பார்ப்பனராகத்தான் இருக்கவேண்டும்.பிறகு ஏன் உங்கள் மகள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதில்லை?’ எனக் கேட்டார். இன்னொரு சமயத்தில் நான் பொட்டுவைத்துச் செல்லவில்லை என என்னுடைய பிசினஸ் ப்ரபோசலைக் கூடப் பார்க்க மறுத்துவிட்டார். மாணவிகள் என்றால் ஆறு மணிக்கு எல்லாம் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கவேண்டும்,மாணவர்கள் எட்டுமணி வரை ஊர் சுற்றலாம்.ஒரு செமஸ்டரில் ஒரு மாணவி இரண்டு முறைக்கு மேல் வெளியே செல்லமுடியாது. அந்த இரண்டு முறையும் கூட பெற்றோர் கையோப்பமிட்டு ஹாஸ்டல் வார்டன் மற்றும் டீனிடம் ஒப்புதல் வாங்கிக்கொண்டுதான் வெளியே செல்லவேண்டும். ஆனால் ஆண்கள் எங்கு நினைத்தாலும் யார் அனுமதியுமின்றி செல்லலாம்.ஹாஸ்டலுக்குள் டென்னிஸ் விளையாடும் பெண்கள் முழு பேண்ட், துப்பட்டா அணிந்துதான் விளையாடவேண்டும், கல்லூரி கல்ச்சுரல் விழாக்களில் பெண்கள் ஒரு பேரிகேடுக்குள்தான் இருக்கவேண்டும். அதைத்தாண்டி வரக்கூடாது.ஆண்கள் கல்லூரி முழுக்க எங்கு வேண்டுமானாலும் சுற்றித்திரியலாம். கல்ச்சுரல்ஸ் முடிந்து மீண்டும் ஹாஸ்டலுக்குச் செல்லும் மாணவிகள் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயேதான் நகர்ந்து செல்லவேண்டும். அதை மீறி வெளியே கால் எடுத்து வைக்கக் கூடாது’ என அடுக்கடுக்காகத் திணிக்கப்படும் பாலினவாதத்தைப் பட்டியலிட்டுள்ளார்.
மேலும் சில ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யாமை உள்ளிட்ட பல புகார்கள் இதில் எழுப்பப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின்மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் இந்தப் புகார் பல்வேறு தரப்புகளைத் திகைக்கவைத்துள்ளது.
Also Read: Metoo புகார்கள் முதல், விருது மறுபரிசீலனை வரை! - வைரமுத்து விவகாரம் ஒரு டைம்லைன்