கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பரமத்தி ஊராட்சி, செம்மண்டம் பாளையம், தென்னிலை ஊராட்சி, கூடலூர் ஊராட்சி ரங்கப்பாளையம் கிராமம், சின்ன தாராபுரம் ஊராட்சி பகுதியில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பயணம் மேற்கொண்டு செய்தியாளர்களுடன் பார்வையிட்டார்கள்.
கரூர் மாவட்டம், க. பரமத்தி ஒன்றியம் பரமத்தி கிராமம் இந்திரா நகர் பகுதியில் ரூ.21.96 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கருடாம்பாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணியையும், செம்மண்டம் பாளையம் கிராமத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சி குழி அமைக்கும் பணியையும், செம்மண்டம் பாளையம் கிராமத்தில் ரூ.21.55 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் நுண்ணீர் உரம் தயாரித்தல் குறித்தும், தொடர்ந்து சாமியாத்தால் பழனிச்சாமி நாச்சிமுத்து நகர் பகுதியில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனிநபர் வீடு கட்டும் பணிகளை கேட்டறிந்தார்.
அதே பகுதியில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பாரத மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனிநபர் வீடு கட்டும் பணிகளையும், தென்னிலை ஊராட்சி பகுதியில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய சத்துணவு மையம் கட்டிடத்தினையும், கூடலூர் ஊராட்சி ரெங்கப்பாளையம் கிராமத்தில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் தோட்டக்கலைத் துறை மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு பணிகள் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னிலை தெற்கு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுடன் பாடங்கள் குறித்து கேட்டறிந்து மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நோட்டு மற்றும் பேனாக்களை பரிசாக வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் கலந்துரையாடினார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரகப் பகுதிகளில் அரசு புறம்போக்கு இடங்கள், ஊராட்சி இடங்கள், குளக்கரைகள் ஆகிய இடங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் பருவமழை காலங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக சரக்கொன்னை, தூங்கு மூஞ்சி, புங்கன், வேம்பு, முருங்கை, பழ வகைகளில் பெருநெல்லி, பொய்யா, மாதுளை மற்றும் சீதாப்பழம் உள்ளிட்ட பல்வேறு மர வகைகளை உற்பத்தி செய்திடும் வகையில் ரூ .6.86 லட்சம் மதிப்பீட்டில் 10000 மரக்கன்றுகளை உருவாக்கிட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு வழங்கும் வகையில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு முருங்கை நாற்றங்களிலும் 5000 முருங்கை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 50 முருங்கை நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு தோட்டக்கலை நாற்றங்கால்களிலும் 5000 பலவகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 22 தோட்டக்கலை நாற்றங்கால் அமைக்கப்பட்டு சிறு குறு விவசாயிகளுக்கு பல வகை மரக்கன்றுகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்