கரூரில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் வராததால் வீடுகளில் தேங்கிய குப்பைகளை பொதுமக்கள் திறந்த வெளியில் கொட்டியதால் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளன.


 




 


எடை அளவு நிர்ணயம், விடுமுறை ஊதிய பிடிப்பு, முறையற்ற ஊதியம் வழங்குதல், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரூர் தாந்தோணிமலை மண்டல அலுவலகத்தில் இருந்து மில்கேட், சுங்ககேட், திருமாநிலையூர், வழியாக கரூர் நோக்கி ஊர்வலமாக வந்த அவர்கள் ஆசாத் சாலையில் உள்ள கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று தினம்தோறும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் வராததால் வீடுகளில் தேங்கிய குப்பைகளை பொதுமக்கள் திறந்த வெளிகளில் கொட்டி சென்றுள்ளனர்.


 




 


கரூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளியில் சாலை ஓரங்களில் காய்கறி கழிவுகள், மருத்துவ கழிவுகள், நெகிழி குப்பைகள் என குப்பைகள் மழை போல் தேங்கியுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிற்பகல் 12:30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்ட அவர்கள் அங்கு இருந்து புறப்பட்டனர்.


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண