சேலம்: பயணிகளின் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு, சேலம் வழியாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரு, திருவனந்தபுரம், கண்ணூர், சென்னை மற்றும் எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் இந்த ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Continues below advertisement

பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்

பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.25 மணிக்கு சேலம், 10.30 மணிக்கு ஈரோடு, 11.23 மணிக்கு திருப்பூர், நள்ளிரவு 12.58 மணிக்கு போத்தனூர் வழியாக சென்று, மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடைகிறது.

மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து வரும் ரயில் வரும் 3-ம் தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.59 மணிக்கு போத்தனூர், 9.38 மணிக்கு திருப்பூர், 10.10 மணிக்கு ஈரோடு, 11.25 மணிக்கு சேலம் வழியாகச் சென்று, மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

Continues below advertisement

பெங்களூரு - கண்ணூர் எக்ஸ்பிரஸ்

பெங்களூருவில் இருந்து கண்ணூர் செல்லும் மற்றொரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு 9.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் அதிகாலை 2.10 மணிக்கு சேலம், 3.15 மணிக்கு ஈரோடு, 4.03 மணிக்கு திருப்பூர், 5.48 மணிக்கு போத்தனூர் வழியாகச் சென்று, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு கண்ணூரை சென்றடைகிறது.

மறுமார்க்கமாக கண்ணூரில் இருந்து நாளை மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 9.40 மணிக்கு போத்தனூர், 10.28 மணிக்கு திருப்பூர், 11.15 மணிக்கு ஈரோடு, நள்ளிரவு 12.15 மணிக்கு சேலம் வழியாகச் சென்று, மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூருவை அடையும்.

சென்னை - போத்தனூர் சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு 11.55 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் அதிகாலை 1.58 மணிக்கு காட்பாடி, 3.25 மணிக்கு ஜோலார்பேட்டை, 5.10 மணிக்கு சேலம், 6.20 மணிக்கு ஈரோடு, 7.13 மணிக்கு திருப்பூர் வழியாகச் சென்று காலை 9.15 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.

மறுமார்க்கமாக வரும் 4-ம் தேதி மாலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் ரயில், 7.18 மணிக்கு திருப்பூர், 8.20 மணிக்கு ஈரோடு, 9.27 மணிக்கு சேலம், 11.48 மணிக்கு ஜோலார்பேட்டை, நள்ளிரவு 1.18 மணிக்கு காட்பாடி வழியாகச் சென்று, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னையை சென்றடையும்.

எர்ணாகுளம் - சென்னை எக்ஸ்பிரஸ்

எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 4-ம் தேதி இரவு 11.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படுகிறது.

இந்த ரயில் அதிகாலை 3.18 மணிக்கு போத்தனூர், 4.13 மணிக்கு திருப்பூர், 5.05 மணிக்கு ஈரோடு, 6.07 மணிக்கு சேலம், 8.15 மணிக்கு ஜோலார்பேட்டை, 9.33 மணிக்கு காட்பாடி வழியாகச் சென்று மதியம் 12.30 மணிக்கு சென்னையை சென்றடையும்.

மறுமார்க்கமாக சென்னையில் இருந்து வரும் ரயில் வரும் 5-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.38 மணிக்கு காட்பாடி, 5.55 மணிக்கு ஜோலார்பேட்டை, 7.17 மணிக்கு சேலம், 8.15 மணிக்கு ஈரோடு, 9.10 மணிக்கு திருப்பூர், இரவு 11 மணிக்கு போத்தனூர் வழியாகச் சென்று, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

சேலம் வழியாக இயக்கம்

இந்த நான்கு சிறப்பு ரயில்களும் சேலம் வழியாக இயக்கப்படுவதால், சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பெங்களூரு, சென்னை மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக, சேலம் - ஈரோடு - திருப்பூர் - போத்தனூர் வழித்தடத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு இந்த சிறப்பு ரயில் சேவைகள் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் தங்களது பயணத் தேதிக்கு ஏற்ப ரயில் நேரங்களை முன்கூட்டியே சரிபார்த்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.