தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணை மேட்டூர். மேட்டூ்ர் அணையை நம்பி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும், அந்த மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை உள்ளது. 

Continues below advertisement

மேட்டூர் அணை உபரிநீர்:

இந்த சூழலில், மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளதாக வீடியோ ஒன்று வைரலாகியது. அதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 

மேட்டூர் உபரி நீர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததாகப் பரப்பப்படும் வதந்தி

Continues below advertisement

பரவும் செய்தி

மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததாக யூடியூப் சேனல் ஒன்றில் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை உபரிநீர்:

இது முற்றிலும் தவறான தகவல். மேட்டூர் அணை நிரம்பிய பிறகு அதன் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.

நிலம் கையகப்படுத்தல், மின் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான செலவு மற்றும் வடிவமைப்பு மாற்றம் காரணமாக 2023 ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

வதந்தியை நம்ப வேண்டாம்:

பட்டா ஏரிகளைத் தவிர்த்து 82 பொது ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்த நிலையில் முதல் கட்டமாக 57 ஏரிகளில் நீர் நிரப்பப்பட்டது. மீதமுள்ள 25 ஏரிகளுக்கும் நீர் நிரப்பும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததாகப் பரப்பப்படும் தகவல் தவறானது.

வதந்திகளை நம்பாதீர்!

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணை தமிழ்நாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது. சமீப ஆண்டுகளில் போதுமான அளவு மழைப்பொழிவு தொடர்ந்து இருப்பதால் மேட்டூர் அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது. இதனால், தண்ணீர் திறப்பும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீர் கால்வாய்கள் வழியாக விளைநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.