மேலும் அறிய

மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?

கணவனின் கள்ளக் காதலை தட்டிக் கேட்டு , தனியாக வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த மனைவியை கொலை செய்த கணவன்

வீட்டிற்கு பணம் தருவது குறைப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் 38 வயதுடைய சரவணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சித்ரா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 14 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

சரவணன் கூலித் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் நாளடைவில் வீட்டு செலவிற்கு பணம் தருவதை குறைத்து வந்திருக்கிறார். மேலும் மூன்று இரண்டு நாட்கள் வீட்டிற்கு வராமல் வெளியே தங்கி விடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

இதனால் சந்தேகமடைந்த சித்ரா தனது கணவரை செயல்பாடுகளை கண்காணித்த போது அவர் அதே கிராமத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ?

சித்ரா சரவணனிடம் இது குறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில் கணவனை பிரிந்து வாழ நினைத்த சித்ரா தனது குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டிற்கு அருகே வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.

அப்போதும் மனைவியை விடாத சரவணன் தினந்தோறும் சித்ரா தங்கியுள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார். மேலும் சித்ரா பணிபுரியும் கம்பெனிக்கு சென்று அவரை தொல்லை செய்து வந்திருக்கிறார்.

இருப்பினும் சித்ரா அவரது முடிவில் உறுதியா இருந்த நிலையில் ஆத்திரமடைந்த சரவணன் உறவினர்களிடையே சித்ரா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாலே தன்னுடன் வாழ மறுப்பு தெரிவித்து வருவதாக கூறி வந்திருக்கிறார்.

" என்னை விட்டுட்டு எவன் கூட வாழுற "

சித்ராவின் வீட்டிற்கு சண்டையிட செல்லும் போது எல்லாம் "என்னை விட்டுட்டு இங்க எவன் கூட வாழுற" என கேட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் , இதில் ஆத்திரமடைந்த சரவணன் தனது மனைவி சித்ராவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

குழந்தைகள் இருவரும் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது தனது தாய் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் அக்கம் பக்கத்தினரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆத்தூர் டி.எஸ்.பி. சத்யராஜ் நேரில் வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கழுத்தில் காயம் இருந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் சரவணன் ஆத்தூர் காவல் நிலையத்தில் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.

மேலும் போலீசாரிடமும் விசாரணையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்பாராத ட்விஸ்ட்! தமிழ்நாட்டிற்குள் மீண்டும் நுழையும் போர்டு.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!
எதிர்பாராத ட்விஸ்ட்! தமிழ்நாட்டிற்குள் மீண்டும் நுழையும் போர்டு.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!
தலைமைச் செயலகம் மாறுகிறதா? கோயம்பேட்டில் மெகா பிளான்... இனிமேல் இப்படி மாறப்போகிறதா?
தலைமைச் செயலகம் மாறுகிறதா? கோயம்பேட்டில் மெகா பிளான்... இனிமேல் இப்படி மாறப்போகிறதா?
காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு முக்கிய அலர்ட்: இன்று வானிலை எப்படி இருக்கும் தெரியுமா?
காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு முக்கிய அலர்ட்: இன்று வானிலை எப்படி இருக்கும் தெரியுமா?
பணச் சுடுகாடான பள்ளிக்கல்வித்துறை.. அன்பில் மகேஸை வார்த்தைக்கு வார்த்தை விளாசிய தவெக!
பணச் சுடுகாடான பள்ளிக்கல்வித்துறை.. அன்பில் மகேஸை வார்த்தைக்கு வார்த்தை விளாசிய தவெக!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Embed widget