கராத்தே பயிற்சிக்கு சென்ற மாணவி

Continues below advertisement

சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தர் கோவில் மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரியான சிவராஜ் சித்த மருத்துவ கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவம் நான்காமாண்டு பயின்று வந்தவர் மாணவி ( வயது 22 )

இவர் நெல்லை மாவட்டம் விவா நல்லூர் பகுதியை சேர்ந்தவர். எனவே சேலத்தில் கல்லூரிக்கு அருகிலேயே தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கராத்தே கற்றுக் கொள்வதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு பயிற்சியாளரிடம் பயிற்சிக்கு சென்றிருக்கிறார்.

Continues below advertisement

கராத்தே பயிற்சியாளருடன் ஏற்பட்ட பழக்கம்

கராத்தே பயிற்சியாளரான 40 வயதுடைய சக்திவேல் என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சக்திவேலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மாணவியுடன் பழகி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் இருவரும் அடிக்கடி வெளியில் ஊர் சுற்றி வந்த நிலையில் மாணவி சக்தி வேலுடன் பழகுவதை அறிந்த அவரது உறவினர்கள் இது குறித்து வர்ஷினியின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கின்றனர்.

இவர் கூட தான் வாழ்வேன் 

தகவலறிந்த வர்ஷினியின் தாய் தந்தை சேலத்தில் வர்ஷினி தங்கியிருந்த வீட்டிற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். மேலும் தங்களுடன் வருமாறு அழைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த வர்ஷினி "நான் சக்திவேலுடன் தான் வாழ்வேன் " என்று கூறி பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

எனவே அவர்கள் தங்களது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து வர்ஷினியை காதலை கைவிடுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர்.

மாணவியை தாக்கிய தந்தை

மூன்று தினங்களுக்கு முன்பு வர்ஷினியின் தந்தை காசிக்கு செல்வதாக அவரது மனைவியிடம் பத்தாயிரம் பணத்தை வாங்கி கொண்டு சேலத்திற்கு சென்று மீண்டும் தனது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வர்ஷினியின் தந்தை மகளை சரமாரியாக தாக்கியதால் அவர் மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

தப்பி ஓடிய தந்தை

மகள் உயிரிழந்ததை அறிந்த தந்தை நடந்தவற்றை அவரது மனைவிக்கு போன் செய்து கூறி விட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றிருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது மாணவியின் தாய் நடந்ததை கூறி கணவர் மீது புகாரளித்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற மாணவியின் தந்தையை தேடி வருகின்றனர்.